Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி: ரூ1,000 கோடியில் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் பூங்கா- அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ1,000 கோடியில் 1,150 ஏக்கரில் பிரமாண்டமாக அமைய உள்ள பர்னிச்சர் பூங்கா (சர்வதேச அறைகலன் பூங்கா) வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

Recommended Video

    CM MK Stalin Lays Foundation Stone For Furniture Park In Thoothukudi

    தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று தூத்துக்குடி வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்உற்பத்தி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதையடுத்து சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா உருவாகிறது. இந்தியாவிலேயே சர்வதேச பர்னிச்சர் பூங்கா முதல் முறையாக தூத்துக்குடியில்தான் அமைக்கப்படுகிறது.

    விரைவில் பட்ஜெட் தாக்கல்

    விரைவில் பட்ஜெட் தாக்கல்

    இந்த பர்னிச்சர் பூங்கா மூலம் படிப்படியாக 3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாள் தோறும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கிறோம். ஏதாவது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு கொண்டு இருக்கிறோம். விரைவில் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளோம். அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகளிடம் நிதிநிலை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

    வ.உ.சி. கனவு

    வ.உ.சி. கனவு

    சர்வதேச தரத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் பர்னிச்சர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட உள்ள பூங்கா இங்குதான் அமைய உள்ளது என்ற பெருமையை தூத்துக்குடி பெற்று உள்ளது. இந்திய விடுதலை வேட்கையை முதலில் ஏற்படுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் இந்த சர்வதேச பூங்கா அமைய போகிறது. சொந்த தேசத்தில், சொந்த பணத்தில், சுயசார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும் என கனவு கண்டவர் தான் வ.உ.சிதம்பரனார். அவரது பொருளாதார கனவு நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி

    தூத்துக்குடி மாநகராட்சி

    நீர்வளம் நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழரின் ஆட்சி, நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் நிலமாகவும் இந்த தூத்துக்குடி விளங்கி கொண்டிருக்கிறது. முத்துகுளிப்பதற்கு பெயர் பெற்றதால் தான் தூத்துக்குடியை முத்துநகர் என்று அழைக்கின்றோம். இந்த முத்துநகரை தான் கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிராமம் நகரமாகவும், நகரம் மாநகரமாகவும் மாற வேண்டும் என்பது தான் தி.மு.க. அரசின் கொள்கை. அதன் அடிப்படையில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

    ஏன் பர்னிச்சர் பூங்கா?

    ஏன் பர்னிச்சர் பூங்கா?

    தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலும், இந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் தமிழகத்தில் 2-வது பெரிய துறைமுகம். இந்திய அளவில் 3-வது பெரிய துறைமுகம் ஆகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கப்பல்களுக்கும் தூத்துக்குடி துறைமுகம்தான் நுழைவு வாயில். அதனால் தான் இங்கு பர்னிச்சர் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம். திராவிட மாடலை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறுகிய கால நல்வினைக்காக அல்ல. தமிழகத்தில் உள்ள மகத்தான வளங்களை பயன்படுத்தி நிகழ்காலம் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற லட்சியத்தில் நாம் உழைத்து கொண்டு இருக்கிறோம்.

    பிற மாவட்ட திட்டங்கள்

    பிற மாவட்ட திட்டங்கள்

    தற்போது 109 திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.56,229 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமது நோக்கம். தென்மாவட்டத்தை தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையா டவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் விரைவில் அமைக்கப்படும். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் 150 ஏக்கரில் உணவு பூங்கா சிப்காட் மூலமாக அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் சார்பில் 1,000 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இதுவரை ரூ.4,500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 என்ற நிலையை அடைய போகிறது. சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தொழில் பூங்காக்களில் முன்னிலை வகிக்கின்றன. இதில் இந்தியா பின்னடைந்துள்ளது. இதனால் உலக தரத்திற்கு இணையாக தூத்துக்குடியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் தயாரிப்பு பூங்கா அமைக் கப்பட உள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+