Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பளத்தில் ரூ. 2500 பிடித்தம்.. கொட்டும் மழையில் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 700 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 700 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தூய்மை பணியாளர்களுக்கு 526 தூய்மை வாகன ஓட்டுனர்களுக்கு 633 வழங்க வேண்டும் என்ற ஊதியத்தை இதுவரை முறையாக வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது ஊதிய உயர்வை கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

Tuticorin Corporation deducts 2500 from the salary of sanitation workers what happened

5000 போனஸ்

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு பின்பு ரூபாய் போனஸாக ரூ.3000 மற்றும் ரூ.2000 முன்பணம் சேர்த்து ரூ.5000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை மாதந்தோறும் ரூ.500 பிடிக்கப்படும் என்று வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் வழங்கப்பட்ட ஊதியத்தில் சுமார் ரூ.2500 ரூபாய் அவர் லேண்ட் எனும் நிறுவனம் பிடித்தம் செய்து ஊதியம் வழங்கி உள்ளது.

அபராதம் வசூல்

இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் அவர் லேண்ட் நிறுவனத்தை அணுகி கேட்டபோது மாநகராட்சி சார்பில் தங்கள் நிறுவனம் மீது அபராதம் வசூலித்து விதிக்கப்பட்டுள்ளது, அதன் காரணமாக அந்தப் பணத்தை வசூல் செய்வதற்காக தொழிலாளிகளின் பணத்தை பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மை பணியாளர் சங்கத்தினர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, தூய்மை பணியாளர்கள் ஊதியம் பிடித்தம் செய்வதை நிறுத்தி உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திருப்பி வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

Tuticorin Corporation deducts 2500 from the salary of sanitation workers what happened

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுனர்கள் இன்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தொடர்ந்து தொழிலாளர்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர் லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் தூய்மை பணியை மாநகராட்சி நிர்வாகமே எடுத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+