Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, வடை... இனி தடை! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: டீக்கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை செய்தித் தாள்கள் போன்ற அச்சிடப்பட்ட தாள்களில் வைத்து வழங்குவதற்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

என்னதான் காபி ஷாப்கள், பெரிய உணவகங்கள், வீதிக்கு வீதி தோன்றிவிட்டாலும், சாலையோரங்களில் உள்ள டீக்கடைகளில் நின்றுகொண்டு நிம்மதியாக தேநீர் அருந்துவது அலாதி இன்பம்தான்.

அந்த தேநீருடன் சுட சுட எண்ணெய் சட்டியிலிருந்து எடுக்கப்பட்ட வடை, பஜ்ஜி, சமோசா போன்ற பலகாரங்களை எடுத்து பழைய செய்தித் தாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து ஆயில் ஃப்ரீயாக சாப்பிடுவது நம் மக்களின் பழக்கங்களில் ஒன்று.

செய்தித்தாள் பலகாரம்

செய்தித்தாள் பலகாரம்

அதிக எண்ணெயுடன் பலகாரத்தை சாப்பிடுவதால் கொலஸ்டிரால் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்த மக்கள், அந்த எண்ணெயை எடுக்க பயன்படுத்தப்படும் செய்தித் தாள்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் அக்கறை காட்டுவதில்லை. செய்தித் தாள்களில் பலகாரம் சாப்பிடுவது உடலுக்கு கேடு என மருத்துவர்கள் கூறினாலும் டீக்கடைகாரர்கள் அதை பின்பற்றுவது இல்லை.

தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு

மக்களும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அதை அப்படியே சாப்பிடுகின்றனர். இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித் தாள்கள்கள் போன்ற அச்சிடப்பட்ட பேப்பர்களில் வைத்து வழங்க அவர் தடை விதித்து உள்ளார்.

அபராதம்

அபராதம்

தடையை மீறி அச்சிடப்பட்ட தாள்களில் வைத்து எண்ணெய் பலகாரங்களை வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், சட்டப்படியான நடவடிக்கையும் உரிமையாளர்கள் மீது பாயும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

என்ன பாதிப்பு?

என்ன பாதிப்பு?

தாள்களில் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் மைகளில் காரீயம் என்ற தனிமம் உள்ளது. இந்த தனிமம் அச்சிடப்பட்ட தாள்களில் பலகாரங்களை வைத்து சாப்பிடும்போது உணவுக் குழாய்க்குள் செல்லும். அது உடலுக்குள் சென்றுவிட்டால் சிறுநீரகம், கல்லீரல், எழும்புகளின் வளர்ச்சி, தசைகள் வளர்ச்சி போன்றவற்றை கடுமையாக பாதிக்கும். இந்த காரியம் கழிவாக வெளியேறாமல் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து தீஙகை ஏற்பத்துகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+