தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு- மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையிலிருந்து வெளியாகும் புகை, கழிவுநீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதால் அந்த ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! அப்பாவி மக்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக போராட்டம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! அப்பாவி மக்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக போராட்டம்

100 ஆவது நாள்

100 ஆவது நாள்

இந்த போராட்டத்தின் 100 ஆவது நாளான மே 22 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது 2 பெண்கள் உள்பட 13 பேரை காவல் துறை சுட்டுக் கொன்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக அரசால் அமைக்கப்பட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன்

நீதிபதி அருணா ஜெகதீசன்

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் பல கட்ட விசாரணைகளை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம சமர்ப்பித்தார். பின்னர் கடந்த 18ஆம் தேதி இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்றம்

மதுரை மாவட்ட நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த 101 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 27 பேர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜரானதால் மீதமுள்ள 74 பேர் கடந்த 1ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு 64 பேர் மட்டுமே ஆஜராகியிருந்தனர்.

இன்று விசாரணை

இன்று விசாரணை

இதையடுத்து வழக்கில் இன்று 10 பேர் ஜூன் 6 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

English summary
Tuticorin Gunshot case hearing today in Madurai district court. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X