Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீசுக்காக பொய் சாட்சி! வசமாய் சிக்கிய டாக்டர்.. தூத்துக்குடி வின்சென்ட் லாக்அப் டெத்!பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி வின்சென்ட் லாக் அப் மரண வழக்கில் ஒன்பது போலீசாரை திருநெல்வேலி மருத்துவர் காப்பாற்ற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுபழக்கம் இல்லாதவரை போதையில் இறந்ததாக ரிப்போர்ட் செய்ததும் அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு வெளியான நிலையில், திருநெல்வேலி மருத்துவர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் கடந்த 1990ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட லாக்கப்பில் அடக்கி வைக்கப்பட்டிருந்த அவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

tutucorin Lockup Death crime

இதுதொடர்பாக வின்சென்டின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், ஜெயசீகரன், பிச்சையா, வீரபாகு, ராஜ், செல்லத்துரை, சுப்ரமணியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக அரசு சாட்சியாக ஆஜரான அரசு மருத்துவர் ஒருவர், வின்சென்ட் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்று தெரிந்தும், அவர் அதிக மது அருந்தியதால் இறந்ததாக பொய்யான அறிக்கை சமர்ப்பித்தது நீதிமன்றத்தின் தீர்ப்பில் அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம். தாண்டவன் வழங்கிய தீர்ப்பில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதரன் என்பவர் வின்சென்ட் உடலில் காணப்பட்ட 38 காயங்கள், அவர் பந்தயத்தின்போது மாட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று சாட்சியம் அளித்தார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட போலீசார் கூறியது போல், வின்சென்ட் இதய நோயால் இறந்தார் என்ற வாதத்தை நிலைநாட்டவும் அவர் முயன்றார். இருப்பினும், நீதிபதி தாண்டவன் டாக்டர் ஸ்ரீதரனின் இந்த கூற்றுக்களை திட்டவட்டமாக நிராகரித்தார். குறுக்கு விசாரணையின்போது, டாக்டர் ஸ்ரீதரன் போலியான பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் (ADME) நடத்திய விசாரணையில் கலந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.

இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, "டாக்டர் ஸ்ரீதரன் மேற்கண்ட சாட்சியங்களை கவனமாகப் பரிசீலித்ததில், அவர் பணியில் இருந்தபோது கடமை தவறியது போல் துறை ரீதியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்பது தெளிவாகிறது. எனவே, குறுக்கு விசாரணையின்போது டாக்டர் ஸ்ரீதரனின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியுள்ளது. அவர் துறை ரீதியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், நீதிமன்றத்தின் முன் அவர் தவறான மருத்துவக் கோட்பாட்டை முன்வைக்கிறார் என்று கூற முடியாது. ஆனால், வின்சென்ட் காயங்களால் இறக்கவில்லை என்றும், அதிக அளவு மது அருந்தியதால் மட்டுமே அவர் இறந்தார் என்றும் டாக்டர் ஸ்ரீதரனின் கருத்து, மது அருந்தும் பழக்கம் இல்லாத ஒருவரை, அவர் அவ்வாறு கூறியிருப்பது அவரது நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் ஸ்ரீதரன், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பிரேத பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒன்பது போலீசாரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட இந்த முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+