திருச்செந்தூர் கடலில் ஒதுங்கும் அமானுஷ்ய சிற்பங்கள்! என்ன நடக்கிறது செந்தில்நாதன் அரசாங்கத்தில்?
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அமானுஷ்ய சிற்பங்கள் கரை ஒதுங்கும் நிலையில் தலை, கைகள் இல்லாத சிலைகளும் கரை ஒதுங்குகிறது. இது அவ்வப்போது நடப்பதால் திருச்செந்தூரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடும் படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கடல் அரிப்பு காரணமாகவும், கடல் சீற்றத்தின் காரணமாகவும் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து ஏராளமான பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் 20-க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது ஒரு கல்சிற்பம் சேதமடைந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் காணப்படுகிறது. மூன்று அடி உயரம் கொண்ட அந்த சிலையில் தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லை. கழுத்தில் பெரிய மாலை அணிந்தபடி நாட்டியமாடுவதற்காக இரண்டு கால்களையும் விரித்து வைத்தது போல் அந்த சிற்பம் உள்ளது. இடுப்பில் வேஷ்டி கட்டியபடி இந்த சிலை உள்ளது.
அதே போல் அதன் அருகே மற்றொரு சிலையும் காணப்படுகிறது. அந்த சிலையும் தலை மற்றும் வலது கை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த சிலை தட்சிணாமூர்த்தி சிலைபோல் காணப்படுகிறது.
இந்த இரு சிலைகள் அருகே ஒரு நாகர் சிலையும் காணப்படுகிறது. தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதன் காரணமாக கடல் அலையில் சிக்கி வெளிவரும் சிற்பங்களை கடலில் நீராடும் பக்தர்கள் கரையோரம் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் ஒரு நாகர் சிலை கடலுக்கும் கரைக்கும் இடையே நிறுத்தப்பட்டுள்ளது. அதை பார்த்து அந்த வழியாகச் செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து சிலைகள் கிடைத்து வருவது பக்தர்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமார் 4 அடி உயரம் கொண்ட ஒரு கல் கரை ஒதுங்கியது.

அதில் எழுத்துகள் இருந்ததால் கோயில் பணியாளர்கள் அந்த கல்லின் மீது விபூதியை தேய்த்து படித்தனர். அதில் இருந்த எழுத்துகள் தற்போதைய கால எழுத்துக்களாக இருந்தன. மேலும் அந்த கல்வெட்டில் முனி தீர்த்தம் என தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்தது.
அதற்கு கீழ் "இதன் பலன் ஆன்மாக்களை கட்டியிருக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரும்புச் சங்கிலியை தேய்ப்பதற்கு அரத்தை போலிருந்து பலனைக் கொடுக்கும்," என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் இரு கல்வெட்டுகள் கரை ஒதுங்கிய நிலையில் அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என இருந்தது. மேலும் இந்த தீர்த்தத்தில் குளித்தால் சொர்க்கம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும் அவை பராமரிக்கப்படாமல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications