Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1+2+3.. புஷ்பா புருஷன்கள் "மூணு பேரு".. இப்ப அந்த பொண்ணு கர்ப்பம்.. 3 பேருமே காரணமில்லையாம்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: விசித்திரமான வழக்கு, தூத்துக்குடி போலீசாருக்கு வந்துள்ளது.. என்ன செய்வதென்றே தெரியாமல், இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடராம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. படித்த பட்டதாரி பெண்ணும்கூட.. கொரோனா காலத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

Who is this graduate woman and what happened in thoothukudi ottapidaram actually

லாரி டிரைவர்: அப்போது செல்போனில் ஒரு ராங்-கால் வந்ததாம்.. அந்த ராங்-காலில் பேசியவருடன், நட்பு ஆரம்பமாகி உள்ளது.. அவர் ஒரு லாரி டிரைவர்.. பெயர் இசக்கி முத்து.. ஒருகட்டத்தில் 2 பேருமே செல்போனில் பேச தொடங்கியுள்ளனர்.. இதுவே காதலாக மாறியிருக்கிறது.. 2 பேருமே நெருங்கி எல்லைமீறியும் பழகி உள்ளனர்..

ஒருகட்டத்தில் 2 பேருக்கும், கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துவிட்டது. அதனால், இருவருமே பிரிந்துவிட்டனர்.. உடனே, அந்த பட்டதாரி பெண்ணிற்கு ஆறுதல் சொல்வதற்காக, நண்பர் ஒருவர் வந்திருக்கிறார்.. பிறகு, அவருக்கும் இந்த பெண்ணிற்கும் இடையே, காதல் வந்துள்ளது.. 2 பேரும் நெருங்கி எல்லைமீறி பழகியுள்ளனர்.. ஒருகட்டத்தில், அந்த நண்பர், இந்த பெண்ணை ஏமாற்றிவிட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.

அறிமுகம்: இப்போது, 3வது நபர், இந்த பட்டதாரி பெண்ணுக்கு அறிமுகமானார்.. அவருடனும் நெருங்கி பழகியிருக்கிறார்.. இதற்கு நடுவில், அந்த லாரி டிரைவர் இசக்கிமுத்து, மறுபடியும் பட்டதாரி பெண்ணிடம் பழகி உள்ளார்.. இவருக்கு பிறகு, 2வதாக பழகிவிட்டுபோன அந்த நபரும் பழகியுள்ளார்.. ஆக, ஒரே நேரத்தில் 3 பேருமே, பட்டதாரி பெண்ணுடன் பழகிவந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்... ஆனால், அந்த குழந்தையின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று பெண்ணுக்கு தெரியவில்லை.. இதனால், 3 பேரிடமும் தனித்தனியாக சென்று, கர்ப்பமான விஷயத்தை சொல்லி உள்ளார்.

இதைக்கேள்விப்பட்ட 3 பேருமே, அடுத்த செகண்டே எஸ்கேப் ஆகிஉள்ளனர்.. இப்போது பெண்ணுக்கு வீட்டிலேயே, பெண் குழந்தை பிறந்துவிட்டது.. ஒருவேளை குழந்தை பிறந்த விஷயத்தை கேள்விப்பட்டால், அவர்களின் மனம் மாறும் என்று, 3 பேரிடமும் தனக்கு குழந்தை பிறந்தது குறித்து அந்த பெண் செல்போனில் சொல்லி உள்ளார்.

மகளிர் போலீஸ்: உடனே, அந்த 3 பேரும் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று மறுத்ததுடன், போனையும் கட் பண்ணிவிட்டார்களாம்.. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த அந்த பெண், பச்சிளம் குழந்தையுடன் கடம்பூர் மகளிர் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்..

அந்த குழந்தைக்கு உடம்பில் சட்டைகூட இல்லையாம்.. வெறும் உடம்பிலேயே, ஸ்டேஷனுக்கு தூக்கி வந்துள்ளார்.. ஒரு பட்டதாரி பெண், கையில் குழந்தையுடன் வந்து நின்றதை பார்த்ததுமே, போலீஸ் ஸ்டேஷனில் அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. பிறகு நடந்தவற்றை கேள்விப்பட்டதும், அதற்கு மேல் அனைவரும் உறைந்து போயுள்ளனர்..

குழந்தை: பிறகு, அந்த குழந்தைக்கு புதிய சட்டை வாங்கி தந்து, தேவையான உதவிகளையும் செய்ய டிஎஸ்பி உத்தரவிட்டாராம்.. உடனே போலீசாரும் குழந்தைக்கு புதிய சட்டை அணிவித்து பவுடர் போட்டு, பொட்டு வைத்து அலங்கரித்துள்ளனர்.. குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து, தாலாட்டி தூங்க வைத்தனர்.. பசியோடு இருந்த அந்த பெண்ணுக்கும், அவரது அப்பாவுக்கும் சாப்பாடு தந்து பசியாற்றியுள்ளனர். தன்னுடைய பெண் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டாரே என்று நினைத்து, மனமுடைந்த அவரது அம்மா, இறந்தே விட்டாராம்..

பச்சிளம் குழந்தை: அப்பாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்.. வேலைக்கும் செல்ல முடியாத நிலைமையாம்.. இந்த பட்டதாரி பெண்ணாலும் வேலைக்கு செல்லமுடியாத நிலை என்பதால் சாப்பிட கூட வழி இல்லாமல், குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத நிலையில், ஒட்டு துணி கூட வாங்க முடியாமல் பரிதவித்து வருவதாக தெரிகிறது... எனவே, தன்னுடைய குழந்தையின் அப்பாவை, கண்டுபிடித்து தரும்படி, புகாரையும் அந்த ஸ்டேஷனில் அளித்துள்ளாராம்..

போலீசாரும் அந்த குழந்தையின் அப்பா யார்? என்று கண்டுபிடிக்க துவங்கி உள்ளனர்.. அதன்படி, முதலில் லாரி டிரைவர் இசக்கிமுத்துவை, ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்துள்ளனர்.. பிறகு, கர்ப்பத்துக்கு அவர் காரணம் இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2, 3 நபர்களை விசாரிக்கலாம் என்பதற்குள், 2 பேருமே தலைமறைவாகி விட்டார்களாம். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செலவுக்கு பணம்: இதில் 3வது நபர், கஞ்சா கேஸில் சேலம் ஜெயிலில் இருக்கிறாராம்.. 2, 3வது காதலர்களை விசாரணை நடத்தினால் மட்டும் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று போலீசார் சொல்கிறார்கள்.. இப்போதைக்கு, அந்த குழந்தையின் பராமரிப்பு செலவிற்காக 2000 ரூபாய் பணத்தினை தந்துள்ள போலீசார், குழந்தைக்கு தேவையான டிரஸ்களையும் வாங்கி கொடுத்து, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. என்னத்த சொல்றது???

உருக்கம்: இந்த புகாரை கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்தபோது, அந்தபெண் பசியோடு இருந்திருக்கிறார்.. தனக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து தெரிந்ததுமே, அம்மா மனமுடைந்து உயிரிழந்து விட்டதாக போலீசாரிடம் சொல்லி அழுதுள்ளார்..

3 காதலர்களின் வாக்குறுதியை நம்பி பழகியதற்கு இப்போது குழந்தையுடன் அவதிப்படுவதாகவும், அவமானம் தாங்காமல் இருந்த நிலையில், வேலைக்கு செல்ல இயலாமல் அப்பா உள்ளதாலும், மானத்தை மறைக்கவும் ஒட்டுத்துணி வாங்க கூட வழியில்லாத அளவுக்கு வறுமையில் உள்ளதால், இந்த குழந்தைக்கு அப்பாவை கண்டுபிடித்து தர வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இதையெல்லாம் பொறுமையுடன் கேட்ட மணியாச்சி டிஎஸ்பி யோகேஸ்வரன், ஒருவார்த்தைகூட அந்த பெண்ணை திட்டவில்லையாம்.. மாறாக, குழந்தையை பராமரிக்க செலவுக்கு பணம் தந்து, குழந்தைக்கு துணிகளையும் வாங்கிதந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+