வண்டலூருக்குள் நுழைந்த "விருந்தாளி".. யாரந்த குளுகுளு ஜோடின்னு பார்த்தீங்களா? மலைத்து பார்த்த சென்னை
சென்னை: தீபாவளி கொண்டாட்டம் தமிழகமெங்கும் களை கட்டி உள்ள நிலையில், சென்னை வண்டலூர் பூங்காவுக்கு புதுசா 2 விருந்தாளிகள் வந்திருக்கிறார்களாம்.. யாரது?
இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா, வண்டலூர் பூங்காவாகும்.. கடந்த 1855ம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்..

வண்டலூர் பூங்கா: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள். அதற்கு பிறகுதான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் பல உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
இமாலயன் கருப்பு கரடிகள்: தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறைகள் என்பதால், பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த பூங்காவுக்கு, ஒரு ஜோடி இமாலயன் கருப்பு கரடிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.
கடந்த ஜனவரி மாதம், காஷ்மீரின் ஜம்பு உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி இமாலயன் கருப்பு கரடிகள் வண்டலூருக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தன.. ஆனால், இதற்கு மாற்றாக ஒரு இணை வங்கப்புலிகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், ஜம்மு தாவியில் இருந்து, சென்னைக்கு வந்த அந்தமான் விரைவு ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு, ஒரு ஜோடி இமாலயன் கரடிகள் வண்டலூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.. இவற்றை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் இந்த கரடிகளை பரிசோதித்துள்ளனர்.. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக ரூம்களில் இவைகளை வைத்துள்ளனர்.
வங்கப்புலிகள் வருகை: இதற்கான கால அவகாசம் முடிந்ததுமே, உயிரியல் பூங்காவின் காட்சிப்பகுதிக்கு விலங்குகள் இந்த கரடிகள் மாற்றப்படும். அதேபோல, வரும் 15-ம் தேதி ஜம்முவுக்கு திரும்பும் இதே ரயிலில் ஒரு இணை வங்கப்புலிகளை அனுப்பவும் திட்டமிட்டு வருகிறார்களாம்..
ஜம்மு உயிரியல் பூங்காவில் புலிகளை பராமரிப்பது இதுவே முதல்முறை என்பதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஊழியர்களிடமிருந்து, ஒரு வாரத்துக்கு புலிகளை பராமரிப்பது குறித்து நேரடி பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications