வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொதிக்கும் "ஏசி".. தகிக்கும் வேலூர்.. அனல் பறக்கும் போட்டியில் துரைமுருகன் மகன் கதிரானந்த்

வேலூர் தொகுதியை கைப்பற்ற போவது திமுகவா, புதிய நீதி கட்சியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என் மகனை உங்களிடம் தத்து கொடுக்கிறேன்.. துரைமுருகன் உருக்கம்

    வேலூர்: திமுகவின் துரைமுருகன் மகனுக்கும், ஏசி சண்முகத்துக்கும் வேலூரில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் அக்கட்சியின் பொருளாளராகவும் இருக்கிறார். எத்தனையோ பேர் சீட்டுக்காக காத்து கிடக்க, இந்த முறை இவரது மகன் கதிர் ஆனந்துக்கு சீட் வாங்கி விட்டார்.

    எத்தனையோ பேர் இத்தனை நாளாய் காத்துக்கிடக்க, மகனை எம்பியாக்க ஆசைப்பட்டு, காரியத்தை சாதித்து கொண்டாரே என்று கட்சியின் பல முக்கிய தலைகள் கொந்தளிப்புடன் புலம்புகிறார்களாம். மேலும் வேலூர் தொகுதியில் பல ஆண்டுகளாக உழைத்து கொண்டிருப்பவர்கள் இவர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

    தங்க தமிழ்ச்செல்வன் அல்ல... யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை... ஓபிஎஸ் பொளேர்தங்க தமிழ்ச்செல்வன் அல்ல... யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை... ஓபிஎஸ் பொளேர்

    வன்னியர்

    வன்னியர்

    இதனால் எப்படியும் துரைமுருகன் மகனை தோற்கடிப்போம் என உள்ளடி வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறதாம். வன்னியர் ஓட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உள்குத்து வேலைகளை செய்து அவரை தோற்கடிப்போம் என்று தொகுதியின் திமுக தரப்பிலேயே உறுமுகிறார்கள்!

    அதிமுக பலம்

    அதிமுக பலம்

    கதிர் ஆனந்துக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடுபவர் புதிய நீதி கட்சி ஏசி சண்முகம். இவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கென்று பெரிய செல்வாக்கு இல்லாவிட்டாலும் வேலூரில் கணிசமான முதலியார் சமூக வாக்குகள் உள்ளன. அதையும், அதிமுகவின் முழு பலத்தையும் நம்பியே களம் நிற்கிறார்.

    [தமிழக லோக்சபா தொகுதிகள் முழு விவரமும் தெரியனுமா? இங்கே வாங்க!]

    பணம்

    பணம்

    கடந்த முறை தேர்தலில் ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். திமுகவோ 3-ம் இடத்தைதான் பிடித்தது. அதனால் இந்த நம்பிக்கையில் இப்போது மீண்டும் களம் காண போகிறார். போதாக்குறைக்கு பணத்துக்கு பஞ்சமே இல்லை. தொகுதிக்குள் "தாராளங்கள்" காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏசி சண்முகம்

    ஏசி சண்முகம்

    எனவே, துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என எவ்வளவுதான் களத்தில் இறக்கப்பட்டாலும் வேலூர் தொகுதியில் இப்போதைக்கு ஏ.சி.சண்முகத்திடம் கடுமையாக முட்டி மோதும் நிலையில்தான் கதிர் ஆனந்த் இருப்பதாக சொல்கிறார்கள். இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. பார்ப்போம்!

    English summary
    Tough fight between Pudhiya Neethi Katchi AC Shanmugam and DMK Kathir Anandh in Vellore Constutution,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X