எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியம்! அப்பு செய்த காரியம்! காட்பாடியில் அரசியல் கலாட்டா!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்டத் தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி.கதிர் ஆனந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணியை நீங்கள் எப்படி திறந்து வைக்க முடியும் எனக் கேட்டு நூற்றுகணக்கான திமுகவினர் அங்கு குவிந்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதிமுகவினரும், திமுகவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.

காட்பாடி அப்பு
காட்பாடி அப்புவை தெரியாத அதிமுக காரர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அமைச்சர்துரைமுருகனை பலமுறை தண்ணீர் குடிக்க வைத்தவர். சொற்ப ஓட்டுக்களில் தான் தனது வெற்றியை துரைமுருகனிடம் பறிகொடுத்தார் இந்த அப்பு. அதுவும் தபால் ஓட்டுக்களால் தான் துரைமுருகன் ஒரு வழியாக கரையேறினார். இல்லையென்றால் இந்நேரம் நடந்திருப்பது வேறாக இருந்திருக்கும்.

எடப்பாடி பாராட்டு
துரைமுருகனுக்கே டஃப் கொடுக்கிறார் என்றால் அது யாராக இருக்கும் என அப்புவை பற்றி அதிமுககாரர்கள் அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமியுமே கூட அப்புவை அழைத்து அவரது களப்பணியை குறிப்பிட்டு பாராட்டினார். இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக உள்ள அப்பு, இப்போது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை எதிர்த்து வேலூரில் அரசியல் செய்து வருகிறார். திமுக பொதுச்செயலாளர் தரப்புடன் அப்பு இந்தளவு நேரடியாக மோதுகிறார் என்றால் அதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியமே காரணமாக கூறப்படுகிறது.

ரயில்வே மேம்பாலம்
காட்பாடியின் பிரதான இடங்களில் ஒன்றான ரயில்வே மேம்பாலத்தை அதிமுக மாநகர் மாவட்ட தலைவர் அப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், நீ எப்படி எங்க எம்.பி. நிதியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை திறக்கலாம் என திமுகவினர் ரவுண்டு கட்டிவிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் அங்கு திரண்டதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் சமரசம் செய்து இரு தரப்பையும் கலைந்து செல்ல வைத்தனர்.

கதிர் ஆனந்த்
இதனிடையே சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்றுக் கூறிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாலியை கையில் வைத்துக்கொண்டு சுற்றியதை போல், காட்பாடியில் ஒருவர் எப்போதும் ரிப்பனை கையில் வைத்துக்கொண்டு சுற்றுவதாக சினிமா காட்சியை உதாரணமாக கூறி அப்புவை சூசகமாக தாக்கி விமர்சித்துள்ளார் கதிர் ஆனந்த்.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications