ஆம்பூர் விஏஓ முதல் தாசில்தார் வரை.. 17 சென்ட் நிலம் போலி பத்திரப்பதிவு.. சிக்கிய 6 பேர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழகத்தில் நில மோசடிகள்.. அரசு எவ்வளவுதான் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ இப்போதுகூட ஆம்பூர் அருகே 17 சென்ட் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் தாசில்தார், சார்பதிவாளர், விஏஓ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது இந்த நில விவகாரத்தில்?

தமிழகத்தில் நில மோசடிகள் பெருகி கொண்டிருக்கின்றன.. போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..

Ambur VAO Ambur Tahsildar 17 Cent Land 17

சார்பதிவாளர், விஏஓ

4 நாட்களுக்கு முன்புதான் சென்னை வளசரவாக்கத்தில் ரூ.37 லட்சம் நில மோசடி வழக்கில் 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த 60 வயது ஹரிநாராயணன் கைது செய்யப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு நடந்த இந்த மோசடியில், போலி வாரிசு சான்று மூலம் 6,772 சதுரடி நிலத்தை அபகரித்து தனியார் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இப்போது ஆம்பூர் அருகே 17 சென்ட் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக தாசில்தார், சார்பதிவாளர், விஏஓ உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆம்பூர் 17 சென்ட் நிலம்

சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் பூர்ணிமா. ராமசாமி இறந்துவிட்ட நிலையில், அவருக்கு சொந்தமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி பள்ளி தெருவில் 17 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2021-ம் ஆண்டு போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்ததாக பூர்ணிமாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனது தந்தையின் சொத்தை முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னை குற்றப்பிரிவு போலீசில் பூர்ணிமா புகார் கொடுத்தார்.

போலியாக பத்திரப்பதிவு

உடனே போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.. விசாரணையில் நிலம் போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததாக தொழிலதிபர் வேணுகோபால், அவரது மகள் நந்திதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சான்று வழங்கியதாக அப்போதைய விஏஓ செந்தில்குமார் மீதும் புகார் எழுந்துள்ளது. மேலும், அப்போது ஆம்பூர் மண்டல துணை தாசில்தாராக இருந்தவரும், இப்போது தாசில்தாராக பணியாற்றி வருபவருமான பாரதி, ஆவண எழுத்தர் நந்தகுமார், அப்போதைய ஆம்பூர் சார்பதிவாளர் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அலர்ட் மக்களே

மொத்தம் 6 பேர் மீது உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நில மோசடியில் அரசு அலுவலர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றிருப்பது இந்த விவகாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. நிலம் வாங்கும்போது பத்திரங்கள், உரிமை ஆவணங்கள் ஆகியவற்றை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தொடர்ந்து சொல்வது இதற்காகத்தான்.. இப்போது இதற்கான அவசியம் கூடியிருப்பதைதான், இந்த ஆம்பூர் சம்பவமும் நமக்கு உணர்த்துகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+