அண்ணா பல்கலை மாணவி வழக்கு..என்னங்க சார் உங்க சட்டம்? முகநூலில் கொந்தளித்த காவலர்! தூக்கியடித்த எஸ்பி
வேலூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில் திமுக அரசு குறித்து அவதூறாக பதிவிட்டதாக வேலூரைச் சேர்ந்த முதல் நிலைக் காவலர் ஒருவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். இந்த கல்லூரியில் பொறியியல் சார்ந்த பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தான் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அண்ணா பல்கலை சம்பவம்:
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும் அந்த மாணவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் இருவர் குறித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சொல்லி விடுவேன் என்றும், சார் ஒருவர் பேசுகிறார் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை:
மேலும் அந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்தனர். ஞானசேகரன் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வந்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததோடு சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
எதிர்க் கட்சிகள் போராட்டம்:
இது ஒருபுறம் இருக்க இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் எனவும், அவரை காப்பாற்றும் வகையில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் யார் அந்த சார்? என தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பாக போராட்டங்கள் வெடித்துள்ளது.
அரசுக்கு எதிராக பதிவு:
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் அன்பரசன் தான் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் காவலர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
காவலர் சஸ்பெண்ட்:
மேலும் திமுக மற்றும் அதன் தலைவர் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். இதை அடுத்து இந்த விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் முதல் நிலை காவலர் அன்பரசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் அரசுக்கு எதிராக பதிவு செய்வது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்பதால் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் அன்பரசன் விதிகளை மீறி செயல்பட்டு இருப்பது தெரிய வந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய அந்த கருத்து பேஸ்புக் பக்கத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications