அதிர வைத்த அருணா ஜெகதீசன் ஆணையம்! 9 காவலர்கள் மீது என்ன நடவடிக்கை? டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன தகவல்
வேலூர் : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காவலர்கள் 9 பேரிடம் விளக்கம் கேட்டுள்ளோம், அதன்பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பொது மக்கள் தவற விட்ட மற்றும் குற்றவழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே 90 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 124 சவரன் நகைகள், 101 இருசக்கர வாகனங்கள், 384 செல்போன்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை உரிமையாளர்களிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது.
மேலும் வேலூர் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கும் நிகழ்வில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் பொருட்களை வழங்கி, காவலர்களை கௌரவித்தார்.

சைலேந்திர பாபு
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி காவல் நிலையம், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலையங்கள் கஞ்சா இல்லாத, முற்றிலும் ஒழிக்கப்பட்ட காவல் நிலையங்களாக உள்ளது. அவர்களுக்கு "போதை பொருள் இல்லா காவல் நிலையங்கள்" என பாராட்டியுள்ளோம். காலம்போக்கில் தமிழகத்தில் உள்ள 1484 காவல் நிலையத்தையும் போதை பொருள் இல்லா காவல் நிலையங்களாக மாற்றுவோம். அடுத்த கட்டமாக போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகளுக்குள் போட்டி வைத்துள்ளோம். இன்னொரு 6 மாத காலத்தில் போதை பொருள் இல்லா தமிழகத்தை மாற்றுவது எங்கள் நோக்கமாக உள்ளது.

தீபாவளி பண்டிகை
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் காவலர்கள் குற்ற சம்பவங்களை தடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க சீருடையிலும், சாதாரண உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வாகன நெரிசல் பெரும் சவாலாக உள்ளது அதை சரி செய்யவும் இரவு முழுவதும் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பொது மக்கள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டும்.

கஞ்சா விற்பனை
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆந்திராவை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளை அங்கேயே சென்று கைது செய்துள்ளோம் இதனால் வெகுவாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஒடுக்கப்பட்டுள்ளது. கைது செய்து, சிறையில் அடைத்து, சொத்துக்களை பறிமுதல் செய்த பிறகும் கஞ்சா விற்ற 740 பேரின் பழைய வழக்கில் ஜாமின் ரத்து செய்துள்ளோம். கஞ்சா விற்பனை பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காவலர்களிடம் விளக்கம்
கஞ்சா வியாபாரிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்கள். இதை ஒரு போதைக்கு எதிரான போராகத்தான் பார்க்கிறோம், போரை தொடுத்துள்ளோம். 2 , 3 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது இறுதிப் போரில் வெற்றி பெறுவது தான் எங்கள் நோக்கம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட ஆணையத்தில் குறிப்பிட்ட காவலர்கள் சம்மதப்பட்ட 9 பேரிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என கூறினார்.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
திருத்தணி தலைமை காவலரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு தலைவலி.. பிரபல மருத்துவமனையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications