வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதிர்ஆனந்தின் வெற்றி வாய்ப்பை திசை திருப்பவே ரெய்டு.. ஏன் கடந்த மாதம் நடத்தியிருக்கலாமே- துரைமுருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Raid in Duraimurugan house | துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

    வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதை திசை திருப்பவே ஐடி ரெய்டு நடத்தியுள்ளார்கள் என வேல்முருகன் தெரிவித்தார்.

    வேலூர் காட்பாடியில் உள்ள காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் வந்து விடிய விடிய சோதனை நடத்தினர். இதனால் திமுகவினர் அங்கு திரண்டனர்.

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய ரெய்டு.. தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்புதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய ரெய்டு.. தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

    5.30 மணிக்கு முடிவு

    5.30 மணிக்கு முடிவு

    இந்த சோதனை முடிந்த பிறகு, துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் வீட்டுக்கு அதிகாலை 3 மணி முதல் சோதனை நடத்தினார்கள். பின்னர் 5.30 மணிக்கு சென்றுவிட்டனர்.

    சோதனை

    சோதனை

    வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிரகாசமாக உள்ள வெற்றியை திசை திருப்பவே வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளனர்.

    முதுகில் குத்திய நபர்கள்

    முதுகில் குத்திய நபர்கள்

    தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன. போன மாதம் எங்கள் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியிருக்கலாமே. மத்திய- மாநில அரசோடு நடைபெற்றிருக்கிற சோதனை இது. வருமான வரித் துறை மூலம் எங்கள் முதுகில் குத்துகிறார்கள்.

    தேர்தல் பறக்கும் படை

    தேர்தல் பறக்கும் படை

    எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் வருமான வரித் துறை அதிகாரிகள் என்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்றும் மாற்றி மாற்றி பேசினர் என்றார் துரைமுருகன்.

    English summary
    Duraimurugan asks why the IT officials didnt come to conduct raid in the last month? What is the necessity to conduct raid in election time?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X