முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் சேர அழைப்பு.. என்னென்ன நன்மைகள்.. கலெக்டர் தகவல்
வேலூர்: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். உறுப்பினர்களாக இணைந்தால் பல்வேறு சலுகைகளை அரசு தருகிறது. அதனை பற்றியும் பார்ப்போம்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "வேலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக 4 லட்சத்து 26 ஆயிரத்து 993 பேரும், அவர்களை சார்ந்தவர்கள் 3 லட்சத்து 569 பேர் என மொத்தம் 7 லட்சத்து 27 ஆயிரத்து 561 பேர் உள்ளனர். முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
2.50 ஏக்கருக்கு மேற்படாத நஞ்செய் நிலத்தை அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புஞ்செய் நிலத்தினை சொந்தமாக வைத்திருந்து மற்றும் அந்த நிலத்தில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை அனைத்து குறு மற்றும் சிறு விவசாயிகள்.
உறுப்பினராக பதிவு செய்வது எப்படி: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்கோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள். இந்த 2 வகைகளை சேர்ந்தவர்கள் உறுப்பினராக பதிவுபெற தகுதியுடையவர்கள்.
மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி உள்ளது. இந்த திட்டங்களின் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகாவில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications