மூணே நாள்தான்.. புது தாலியுடன் தூக்கில் தொங்கிய மகாலட்சுமி.. தந்தையின் குடிவெறியால் விபரீதம்.. ஷாக்
கணவனுக்கு தந்தை வயது என்பதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்
வேலூர்: குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, பெற்ற மகள் மகாலட்சுமியை தன்னுடைய நண்பனுக்கே கல்யாணம் செய்து வைத்துள்ளார்.. தந்தை வயது நபரை திருமணம் செய்த மகாலட்சுமியோ, மூன்றே நாளில் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உள்ளாக்கி வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது வடுகந்தாங்கல் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சாந்தகுமார்.. இவரது மனைவி சம்பூர்ணம் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சாந்தகுமார் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.. ஆனால் சாந்தகுமார் மட்டும் தினமும் தண்ணி அடிப்பார்.. இவருக்கு சங்கர் என்ற ஒரு நண்பர் உண்டு. அவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.. சங்கருக்கு 45 வயதாகிறது.. ஆனால் கல்யாணம் இன்னும் ஆகவில்லை.. சாந்தகுமாரும், சங்கரும் நெருங்கிய நண்பர்கள்.. ஒன்றாகவே இருப்பார்களாம்.

சாந்தகுமார்
சாந்தகுமாருக்கு சங்கர் தினமும் மது வாங்கி தருவாராம்.. இருவரும் ஒன்றாகவே குடிப்பார்கள்.. மேலும் இவரது குடும்பம் வறுமையில் உள்ளதால், சங்கர்தான் அடிக்கடி ஏதாவது உதவிகளை செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில் சங்கருக்கு 45 வயசு ஆகியும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை சாந்தகுமாருக்கு வந்தது.. அதனால் தன்னுடைய மகள் மகாலட்சுமியை சங்கருக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்தார்.

பிடிவாதம்
இதை கேட்டதும் மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. கல்யாணத்தில் விருப்பமில்லை என்றும் சொல்லி உள்ளார்.. ஆனால் சாந்தகுமார்தான் பிடிவாதமாக இந்த கல்யாணத்தை கடந்த ஏப்ரல் 29 -ம் தேதி விரிஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் நடத்தி உள்ளார். ஊரடங்கு நேரத்தில் எப்படி இந்த கல்யாணத்தை சாந்தகுமார் செய்தார் என்றே தெரியவில்லை.. யாருக்குமே இப்படி ஒரு கல்யாணம் நடந்தது கடைசிவரை தெரியவே இல்லை.

மணமக்கள்
கல்யாணம் ஆன 3 நாளும் மணமக்களை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் சாந்தகுமார். அந்த 3 நாளுமே மகாலட்சுமி அழுதபடியே இருந்துள்ளார்.. 3 நாளும் மன உளைச்சலில் தவித்துள்ளார். இறுதியில் மே 1ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரம், ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... வீட்டிற்குள் நுழைந்த சங்கர் மனைவி சடலமாக தொங்குவதை கண்டு அதிரரந்து போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வைத்தனர்.

விசாரணை
பிறகு வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.. கல்யாணம் ஆகி 3 நாளில் பெண் உயிரிழந்ததால், ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, பெற்ற மகளை நண்பனுக்கு கல்யாணம் செய்து வைத்ததும், மனம் உடைந்து அந்த பெண் தறகொலை செய்ததும் வேலூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. லாக்டவுன் சமயங்களில் இதுபோன்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருவது தமிழக மக்களை கவலைக்குரியதாக்கி வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications