மகனை முதல்வராக்கி, துணை பிரதமராக கனவு காணும் ஸ்டாலின்: அண்ணாமலை
வேலூர் : திமுக தலைவர் ஸ்டாலின் துணை பிரதமராகவும், தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும் காய் நகர்த்துகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
Recommended Video
வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் கார்த்தியாயினி வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

பெரிய கட்சியில்லை
அப்போது அவர் கூறும் போது, "உள்ளாட்சித்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும்/ பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து அரசியலை செய்ய எந்த பெரிய கட்சியுமில்லை.

திமுக நோக்கம்
காங்கிரஸ் கட்சியிலும் அதிகம் குழப்பம் உள்ளது இதனால் காங்கிரஸ் சிதறியுள்ளது அடுத்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற முடியாது. மாநில கட்சிகளான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் நோக்கத்தில் உள்ளனர்.

ஸ்டாலின் துணை பிரதமர்
குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார் இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார்.

அண்ணாமலை விமர்சனம்
இருந்தாலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் பாஜக வெற்றி பெறும். மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கட்சியாக குறை சொன்னது. ஆனால் இன்று திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு சட்டமன்ற பட்ஜெட்டில் வக்காலத்து வாங்கியுள்ளனர். திமுகவின் பொய் வாக்குறுதிகள் நூறு நாளில் வெளுத்துவிட்டது மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டார்கள் " இவ்வாறு பேசினார்.












Click it and Unblock the Notifications