சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை.. வேலூர் கோர்ட் பரபர தீர்ப்பு
வேலூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலகட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தனது மனைவியுடன் ஆஜரானார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications