துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோதே.. திடீரென மைக் ஆப்.. கரண்ட் கட்.. என்னாச்சு?
வேலூர்: மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அமைச்சர் துரைமுருகன் செய்வதறியாமல் தவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மின் வெட்டு தலைத்தூக்கியுள்ளது. முதல்முறையாக மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் மின்கம்பிகளில் அணில்கள் விளையாடுவதால் அவை பழுதாகி மின் தடை ஏற்படுகிறது என கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். அவரை அவ்வப்போது கிண்டலும் செய்தனர்.

அதிமுக ஆட்சி
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின் வெட்டே இல்லை. திமுக ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியது ஏன் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர். எனினும் தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

சீமான்
ட்விட்டரிலும் நெட்டிசன்கள், சீமான் உள்ளிட்டோர் மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜியிடம் புகார்களை கூறியிருந்தனர். இதிலும் செந்தில் பாலாஜிக்கும் சீமானுக்கும் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த போதே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன்
வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் தான் படித்த பள்ளி குறித்தும் பள்ளி காலத்தில் இருந்த அனுபவம் குறித்தும் மேடையில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பேசத் தொடங்கிய போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது துரைமுருகன் ஏன் என்னாச்சு என கேட்டார்.

பவர் கட்
அப்போது மேடையில் இருந்தவர்கள் கரன்ட் கட் சார் என கூறினர். இதையடுத்து பேச்சை நிறுத்திய துரைமுருகன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்று அமர்ந்தார். தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பவர் கட் ஏற்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அமைச்சர் பேசும் போது அணில் குறுக்கால ஓடிவிட்டது என கலாய்த்து வருகிறார்கள்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications