வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணியில் கவனக்குறைவு! உதவி தர ஆய்வாளர் சஸ்பெண்ட்! அரசு அதிரடி நடவடிக்கை!

Google Oneindia Tamil News

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடை ஒன்றில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 சுற்றுகள்.. தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை? முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் கடிதம் 3 சுற்றுகள்.. தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை? முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் கடிதம்

மேலும், தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

ரேஷன் கடை


திருப்பத்தூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் வழங்கப்பட்ட சில பொருட்கள் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதாகவும் சமூக ஊடகங்களில் புகார்கள் வெளியாகின. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட உதவி தர ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொங்கல் பொருட்கள்

பொங்கல் பொருட்கள்

அந்த கடையில் இருந்த தரமற்ற பொருட்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு புதிய தரமான பொருட்கள் வழங்கப்பட்டன. தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கண்காணித்து, உரிய நடவடிக்கைளை உடனுக்குடன் எடுக்கவும் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள் தரமற்று இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு தரப்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கவனக்குறைவு

கவனக்குறைவு

உதவி தர ஆய்வாளர் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்த போது கவனமாக இருந்திருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுகளையே தவிர்த்திருக்கலாம் என்பது அரசின் எண்ணம். இதனிடையே மேலும் சில இடங்களில் இருந்து வந்துள்ள புகார்களை விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகிவிட்டது.

English summary
Ration shop Assistant Quality Analyst Suspended
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X