குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200.. வேலூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!
வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தினசரி பணிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பொது இடங்கள், கால்வாய், கானாறு உள்ளிட்டவற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
தூய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சரியாக குப்பைகள் வாங்க வராத காரணத்தால் தான் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே குறிப்பிட்ட நாட்களில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகள் வாங்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் காய்ந்த, ஈரமான குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். வாகனங்களில் குப்பைகளை எடுத்து வந்து பொது இடங்கள், கானாறு, கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அபராதம் விதிக்க முடிவு
இதனைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டது. ஆனாலும் குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

மாநகராட்சி அறிவிப்பு
இந்த நிலையில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும், வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கபடும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சன்மானம் அறிவிப்பு
மேலும், காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதமும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications