நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. அடுத்த தேர்தல் எங்களை மையப்படுத்தித்தான் இருக்கும்.. சீமான் அதிரடி
கொட்டும் மழையில் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்
Recommended Video
வேலூர்: அடுத்த சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியை மையப்படுத்திதான் கட்டமைக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
வேலூர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
அவர் பேச ஆரம்பித்த போதே மழை பெய்தது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறே சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐயா மோடி
"இப்பவாவது மழை பெய்யட்டும்.. எவ்வளவு மழை பெஞ்சாலும் இந்த நாட்டில் தண்ணி பஞ்சம் தீர போறது இல்லை. காரணம் இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பொருளாதார கொள்கை. மழை நீரை வீட்டில் சேகரிங்க என்று ஐயா மோடி சொல்றார். நாங்க வீட்டில் சேமிக்கிறோம், நாட்டில நீர் எவ்ளோ சேமித்து வெச்சிருக்கீங்க?

லஞ்சம்
இங்க, கட்சி தொடங்கும்போது நாங்கள்தான் மாற்று என்கிறார்கள். இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டால், அது எப்படி மாற்றாக இருக்க முடியும்? கட்சி தொடங்கும்போது ஊழல், லஞ்சத்தை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவதாக கூறுவார்கள்.

இதுவா மாற்று?
ஆனால் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்கள் கூட்டணி வைத்தால், இது மாற்றா? மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். அதனால்தான் நாங்கள் மக்களை நம்பி தொடர்ச்சியாக களம் இறங்கி வருகிறோம். என்னை பற்றி செய்திகள் வரக்கூடாது என்று தடுத்தார்கள். ஆனால் மக்கள் எங்களை நம்பினார்கள். நம்பிக்கை ஆற்றலாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி
அடுத்து வரப்போகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் நாம் தமிழர் கட்சி மையப்படுத்திதான் கட்டமைக்கப்படும். நாங்கள் என்ன முடிவெடுக்க போகிறோம் என்பதை வைத்துதான்! இவர்கள் என்ன கொள்கை திட்டமும் இல்லை. நான் என்ன சொன்னேனோ அதைதான் சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றி வருகிறார். ஆந்திராவில் சட்டம் கொண்டு வந்தது போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க வேண்டும்"
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications