வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்
Recommended Video

வேலூர்: வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சி தலைவரான ஏசி சண்முகமும், திமுக சார்பில் கதிர்ஆனந்தும் நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கெனவே நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் ஓபிஎஸ்ஸின் மகன்.

ஏசி சண்முகம்
இந்த நிலையில் தனது செல்வாக்கையும் டெல்லியில் நிலைநிறுத்திக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமியும் தன் சார்பில் ஒரு எம்பி இருக்க வேண்டும் என்பதால் எப்படியாவது ஏசி சண்முகத்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.

ரத்து
அதுபோல் திமுகவின் கோட்டை வேலூர் என கூறப்படுவதால் அங்கு எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும் உள்ளது. இந்த இரு வேட்பாளர்களாலேயே கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழிசை
தற்போது மீண்டும் அவர்களே வேட்பாளர்கள் என்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தீபலட்சுமி அடித்துக் கூறுகிறார். இந்த நிலையில் விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் காமராஜர் மணி மண்டபத் திறப்பு விழாவுக்கு வந்திருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

விளம்பரம்
அப்போது அவர் கூறுகையில் வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது. விளம்பரத்துக்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார். புதிய கல்விக் கொள்கை பற்றி தெரியாமல் பேசுகிறார் நடிகர் சூர்யா என்றார் தமிழிசை சவுந்திரராஜன்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன்












Click it and Unblock the Notifications