இப்ப நீ மட்டும் சரக்கு அடிக்கலை.. கொன்னுடுவேன்.. காதரை மிரட்டும் மோமோ
இளைஞருக்கு மோமோ விளையாட்டு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வேலூர்: "இப்போ நீ நிறைய சரக்கு அடிக்கலைன்னா... உன்னை கொன்னேபுடுவேன்" என்று மிரட்டி எடுத்துவிட்டது அந்த மோமோ!
எங்கேயோ ரஷ்யாவில் ஆரம்பிச்ச இந்த விளையாட்டு இன்னைக்கு நம்ம ஊர் கிராமங்கள் வரை வந்து உயிரை வாங்க ஆரம்பித்து விட்டது.
சவால் என்ற பெயரில் அசிங்க அசிங்கமான கேள்விகளை கேட்பது, அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் விளையாடும் நபரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, மானம் போற மாதிரி கேள்வி கேட்டு சாகிற வரைக்கும் கொண்டு போய் விடும் ஒரு ஆபத்தான விளையாட்டுதான் இந்த மோமோ.

எதிர்ப்புகள் கிளம்பின
தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், தற்கொலையே சவாலின் முடிவாக அமையும் வகையிலும் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் குழந்தைகள், இளைஞர்களை வன்முறைக்கு இட்டு செல்கிறது என்றும் இந்த விளையாட்டுக்கு எதிர்ப்புகள் நம் மாநிலத்தில் கிளம்பியது.

கல்வித்துறை அதிகாரிகள்
இது ஓரளவு தடுக்கப்பட கல்வித்துறை அதிகாரிகள் சார்பில் நடிவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுசா இந்த விளையாட்டு இன்னும் போய் ஒழியவில்லை போல இருக்கு. கொஞ்ச நாளா சத்தமே இல்லாமல் கிடந்தது அந்த மோமோ. திரும்பவும் வேலையை காட்ட ஆரம்பிச்சிடுச்சு.

காதர் புகார்
வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் காதர். 24 வயசாகிறது. இந்த விளையாட்டு சம்பந்தமாக, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்துவிட்டார். அந்த மனுவில் காதர் சொல்லி இருப்பதாவது:

ரகசியத்தை வெளியிடுவேன்
4 மாதங்களுக்கு முன் எனது வாட்ஸ்அப்-க்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், என் செல்போனில் இருந்த எல்லா தகவல்களும் திருடப்பட்டு விட்டது என்று இருந்தது. உடனே நான் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால் உன் செல்போனில் உள்ள எல்லா ரகசியத்தையும் வெளியிட்டு விடுவேன் என்றிருந்து. இதை நான் பெரிசா எடுத்துக்கவில்லை. ஆனால் திரும்பவும் எனக்கு கடந்த 16-ந் தேதி வேற வேற நம்பர்களில் இருந்து அதேபோல மெசேஜ் வந்தது.

கொல்லப் போறேன்
அதில், "உன்னை விடமாட்டேன், கொல்லப்போகிறேன். உடனே நிறைய மது குடிக்க வேண்டும்" என்று கட்டளை வந்தது. இதை பார்த்து நான் அதிர்ந்து போய் உள்ளேன். எனவே மோமோ சேலஞ்ச் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிராம் போலீசார், காதருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications