ஆம்பூரில் கட்டப்படும் மேம்பாலத்தில் திடீரென நடந்த விபத்து.. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஷாக்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேம்பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஒருபக்க சாரம் இடிந்து விழுந்ததில், அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நகரப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். ஏனெனில் சென்னை - பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் என்றால் அது ஆம்பூர் நகரம். இதனால் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இது ஒருபுறம் எனில், ஆம்பூரில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்க வேண்டும், சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காகவும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொதுமக்களின் கோரிகையை ஏற்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆம்பூரில் 2.8 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும், 750 மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் ஆம்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு இடையில் மிகவும் நெருக்கமான பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பால பணிகள் தற்போது 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில்,நேற்று மாலை மேம்பாலத்தின் ஒருபக்க சாரம் திடீரென இடிந்து விழுந்ததில், அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications