ஆலயங்காயத்தில் ஆள் கடத்தல் அட்ராசிட்டி... அதிமுக உதவியோடு பதவியை பிடித்த திமுகவின் சங்கீதா பாரி
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை கைப்பற்று வதில் திமுகவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன் தலைவர் பதவியை பிடித்துள்ளார் திமுகவின் சங்கீதா பாரி.
திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவராக சங்கீதா பாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க திமுகவினரிடையே போட்டி நடந்த நிலையில் சங்கீதா பாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 18 கவுன்சிலர்களில் திமுக உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன் 12 வாக்குகளை பெற்று சங்கீதா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த 9ஆம் தேதியும் நடைபெற்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த 12ஆம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 137 கிராம ஊராட்சி தலைவர்கள், 3221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 151 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 1415 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2865 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 19964 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் நேற்று பதவியேற்றனர். இன்றைய தினம் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

திமுக வெற்றி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 11 இடங்களை திமுக கைப்பற்றியது. 4 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், வெற்றி பெற்ற 18 கவுன்சிலர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். 18 கவுன்சிலர்களில் 11 இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ள திமுக கவுன்சிலர்களில் ஒருவர் ஒன்றியக்குழுத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு தரப்பு மோதல்
7வது வார்டில் வெற்றிபெற்ற ஜோலார் பேட்டை எம்எல்ஏ தேவராஜியின் மருமகள் காயத்ரி பிரபாகரனுக்கும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான திமுக பிரமுகர் பாரி என்பவரின் மனைவியான 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதாபாரிக்கும் இடையே ஒன்றியக் குழுத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக, இரு தரப்பினரும் தனித்தனியாக பிரிந்து வெற்றிபெற்ற கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு
இதில் காயத்ரி பிரபாகரனுக்கு ஆதரவாக 5 கவுன்சிலர்களும், சங்கீதாபாரிக்கு ஆதரவாக 6 கவன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியும், தன்னை சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடித்த திமுக எம்எல்ஏ தேவராஜியின் மருமகள் காயத்ரிபிரபாகரன் ஒன்றியக்குழுத் தலைவராக வரக்கூடாது என்பதால், ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 4 அதிமுக கவுன்சிலர்களும், சங்கீதாபாரிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறியதாக தகவல் வெளியானது.

குதிரை பேரம்
காயத்ரிபிரபாகரன் பக்கம் உள்ள 5 கவுன்சிலர்களும் தனக்கு ஆதரவு தரவில்லை என்றாலும் அதிமுக, பாமக மற்றும் ஒரு சுயேட்சை கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என சங்கீதாபாரி காத்திருந்தார். ஒவ்வொரு கவுன்சிலருக்கும் பல லட்சம் வரை பேரம் பேசிய திமுக எம்எல்ஏ தரப்பினர், எதிர்தரப்பு கவுன்சிலர்களை கடத்திச்செல்ல திட்டமிட்டனர்.

கைகலப்பு
கவுன்சிலர் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திமுக, அதிமுக கவுன்சிலர்களை தங்களுடன் வருமாறு கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட சங்கீதாபாரி தரப்பினரும் பதிலுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை தங்கள் பக்கமாக இழுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பானது.

போலீஸ் தடியடி
திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுமக்கள், காவல்துறையினர் முன்னிலையில், திமுக கவுன்சிலர்கள் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. திமுகவினர் ஒன்றிய கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களது வாகனங்களில் ஏற்றிச் செல்ல முயன்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

கவுன்சிலர்களுக்கு தனி கவனிப்பு
இதனையடுத்து காயத்ரிபிரபாகரன் தங்களது ஆதரவாளர்களுடன் தனி வாகனத்திலும், சங்கீதாபாரி தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுடன் தனிவாகனத்திலும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். தனித்தனி வாகனங்களில் கடத்தப்பட்ட திமுக கவுன்சிலர்கள் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தலைவரான சங்கீதா பாரி
இன்று நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி கவுன்சிலர்களுக்கு தடபுடலாக கவனிப்பும் அரங்கேறியது. பல லட்சங்களும் கை மாறின. இந்த நிலையில் இன்று காலையில் 6 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யவே சங்கீதாபாரியின் கை ஓங்கியது. அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவரானார். குதிரை பேரம், கை கலப்பு என அரங்கேறியுள்ளது ஆலங்காயம் ஒன்றிய தலைவர் தேர்தல்.

இளம்பெண் ஸ்ரீலேகா வெற்றி
திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவை சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மானூர் ஒன்றியத்தின் கீழ் 41 கிராம ஊராட்சிகள் உள்ளன.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications