Vijay: கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டது ஏன் – வேலூரில் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை இந்த தேர்தல் போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. விஜய் பிரிக்கும் வாக்குகள் வெற்றி தோல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வேலூர் தவெக கூட்டத்தில் பேசிய விஜய், "கரூர் விஷயத்தில் என் மீது பழியை தூக்கி போட்டது ஏன்" என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், "ஊழல், லஞ்சத்தை நான் எதிர்ப்பதால் எல்லாரும் ஒன்றாக என்னை எதிர்க்கிறார்கள். இந்த தேர்தலில் தவெக திமுக இடையே தான் போட்டியே. நாம் யாரையாவது பேசினால் சிலர் அவர்களாக வரிந்து கட்டி வருகிறார்கள். சிலர் வான்ட்டாக வந்து வண்டியில் ஏறி காமெடி செய்கிறார்கள்.

tvk-vijay-vijay-questioned-mk-stalin-over-karur-incident-in-tvk-vellore-meeting

கரூர் விஷயத்தில் என் மீது பழியா [TVK Vijay]

என் மீது பரப்பும் அவதூறு, மக்கள் மீது பரப்பும் அவதூறு போல. என்னை அசிங்கப்படுத்தினால் மக்களை அசிங்கப்படுத்துவது போல. விஜய்யும் மக்களும் வேறு அல்ல. நாங்கள் ரத்தமும் சதையும் போல. உடலும் உயிரையும் போல. எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது முதலமைச்சர் அவர்கள் தான்.

முதலமைச்சரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "எனக்கு எதிரிகள் எல்லாம் யாரும் கிடையாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள்" என்றார். நாங்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் என்றால் கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியை தூக்கி போட்டீர்கள். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா. நாங்கள் எல்லாம் நண்பன் என்றால் எதற்காக என் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.

அரசியல்வாதிகள் சொத்து விவரம்

எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு பொய்களை அடித்துவிடுகிறீர்கள். லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் தான் உங்கள் நண்பர்கள். உங்கள் ஆட்சி தப்பான ஆட்சி. தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி. எங்கள் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடியா என்கிறது திமுக. எங்கள் வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடி என்பதுதான் அதன் அர்த்தம். இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கும்.

இங்கு சிலர் அரசியல்வாதிகள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாலே போதும். அரசியல்வாதிகள் எல்லோருக்கும் ஒரு ஓப்பன் சேலஞ்ச் விடறேன். அவர்கள் தங்களின் சொத்து விபரத்தை வெளியிட முடியுமா. அரசியலுக்கு வரும் முன்பு எவ்வளவு சொத்து, இப்போதுள்ள சொத்து எவ்வளவு என்று வெளியிட முடியுமா.

விசில் சின்னம்

அப்படி வெளியிட்டால் அது நல்ல வழியில் சம்பாதித்ததா அல்லது ஆட்டையை போட்டதா என தெரிந்துவிடும். இதையெல்லாம் கேட்டால் என் மீது சேற்றை வாரி இறைப்பார்கள். எல்லோரும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எண்ணம் இல்லை. தீயசக்தியை ஸ்விட்ச் ஆஃப் செய்வதற்கான வாய்ப்பு தான் வருகிற தேர்தல். அப்போது விசில் சின்னம் பட்டனை பச்சக்கு.. பச்சக்கு என்று அழுத்தினால் போதும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+