அந்த சிரிப்புதான் சார்.. ஆசையை சொன்ன சிறுவன்! உடனே செய்த போலீஸ் - எல்லோரும் இப்டி இருந்தால்?
திருப்பத்தூர்: போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை வாணியம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நிறைவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
காவல்துறை என்றாலே அதன் மீது மக்களின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வும் மோசமான மனநிலையும் இன்னும் மாறவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் ஆங்காங்கே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறுகள் மற்றும் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதே பழி விழுகிறது.

ஆனால், உண்மையில் எல்லா போலீசாரும் அவ்வாறு இல்லை. பலர் தங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு நெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் மக்களுக்கு உதவி வருகின்றனர். இதுபோன்றவர்களால்தான் நம்பிக்கையோடு நியாயம் கிடைக்கும் என மக்கள் பலர் காவல் நிலையங்களுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில்தான், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராஜா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது தந்தையோடு வந்த சிறுவனிடம் கைகொடுத்து பேசினார். அப்போது அந்த சிறுவன் போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளான்.
"அங்கிள் உங்க தொப்பி அணிந்து பைக் ஓட்டனும்.." சிறுவனின் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜா #Police #Vaniyambadi #Tirupathur_District pic.twitter.com/475TdQnTU2
— Suguna Singh IPS (@sugunasinghips) April 30, 2022
இதனை உடனே ஏற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜா, சிறுவன் அணிந்திருந்த குல்லாவுக்கு மேல் தனது போலீஸ் தொப்பியை மாட்டி, பைக்கில் தன் முன்பாக அமரவைத்து சல்யூட் அடிக்க சொல்கிறார். அந்த சிறுவனும் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே சல்யூட் அடிக்க பைக் புறப்பட்டது.
இந்த வீடியோவை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர அது தற்போது வேகமாக பரவி வருகிறது.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications