வேலூரில் பேச மறுத்த காதலி.. தவியாய் தவித்த காதலன்.. இரவில் அத்துமீறி வீட்டில் நுழைந்து.. இப்படியுமா?
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.கே.நகர் திரவுபதியம்மன் கோயில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்துள்ளார் அந்த பெண்ணின் காதலர். இரவு நேரத்தில் தகராறு செய்ததால் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பாக, போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். எனினும் அந்த அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.. என்ன நடந்தது வேலூரில்?
வேலூர் சின்ன அல்லாபுரம் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சபீனாபானு.. 33 வயதாகிறது.. 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவருக்கு குழந்தை இல்லை.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து தன்னுடைய பெற்றோருடனேயே வசித்து வருகிறார். சதுப்பேரியில் செயல்பட்டு வரும் ஒரு ஷூ கம்பெனியில் வேலைக்கும் சென்று வருகிறார்..
ஒரே கம்பெனியில் வேலை
வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 35 வயது நபரும் இதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.. ஒரே இடத்தில் வேலை செய்ததையடுத்து, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர்.
ஆனால், சபீதா பானுவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட துவங்கியிருக்கிறது.. சுரேஷூடன் சபீதா சரியாக பேசாமல் இருந்துள்ளார்.. பிறகு 6 மாதங்களுக்கு முன்பு ஷூ கம்பெனிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.. இதனால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டுள்ளார்.. ஆனால், சுரேஷிடம் பேச சபீதா மறுத்துவிட்டாராம்.
இரும்புக் கம்பி
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, சபீனாபானுவின் வீட்டுக்கு சென்று, ஏன் தன்னிடம் பேசவில்லை? உனக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா? என்று கேட்டுள்ளார்..
அத்துடன், இரும்பு கம்பியால் சபீனாவை தாக்க முயன்றார்.. இதைக்கண்ட சபீனாபானுவின் அப்பா சிராஜூதீன், அம்மா ஆஜிரா இருவருமே பதறியடித்து ஓடிவந்து சுரேஷை தடுத்தனர்.. ஆனால், அவர்கள் 2 பேரையுமே சுரேஷ் இரும்பு கம்பியால் தாக்கினார்.. இதில் பெற்றோர் இருவரும் அங்கேயே மயங்கிவிழுந்தனர்.
செல்போன் நம்பர் அட்ரஸ்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, உயிரை காப்பாற்றி கொள்வதற்காக, வீட்டிலிருந்து வெளியே ஓடினார்.. ஆனால், அவரை பின்னாடியே விரட்டி சென்று அவரை மடக்கி சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சபீனாபானு பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்ததுமே சுரேஷ் அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விசாரணையை துவங்கினார்கள்.. சுரேஷின் செல்போன் நம்பரை வைத்து, அவரது வீட்டை கண்டுபிடித்து உள்ளே சென்றார்கள்.. அங்கே சுரேஷ் ஃபேனில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து, சுரேஷ், சபிதா இருவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... மயங்கி கிடந்த சபீனாபானுவின் பெற்றோரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.. ஒரே நாளில் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை வேலூரில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications