வேலூர் போலி சிங்கம்.. டீக்காராமனை நியாபகம் இருக்கா? 15 கிலோ தங்கம்.. தண்டனை என்ன தெரியுமா?
வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2021ம் ஆண்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி டீக்காராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடையின் பின்பக்கம் துளையிட்டு முகமூடி அணிந்து புகுந்த அவர், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததுடன், திருடிய நகைகளை அணிந்து ஊரில் சுற்றியதால் போலீசில் பிடிபட்டார். மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர், தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி இரவு, வழக்கம்போல் இரவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலையில் (டிசம்பர் 15 2021) திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், வேலூர் வடக்கு போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து துளையைப் பார்வையிட்டு, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள். போலீசார் அப்போது மோப்ப நாய்கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்தார்கள்.
நகைக்கடை உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த நிலையில், சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து கொள்ளையன் கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்துவிட்டு 15 கிலோ நகைகளைத் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடிய நிலையில், வேலூர் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கான டீக்காராமன்(24) என்பவரை தனிப்படை போலீசார் கொள்ளை போன அடுத்த ஐந்து நாட்களில் கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 4) நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படடது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷ்கலா, கைது செய்யப்பட்ட டீக்காராமன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் செலுத்தப்பட வேண்டும் எனவும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டீக்காராமன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications