Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசர அவசரமாக வேலூர் கலெக்டரிடம் வந்த பெண்.. அதென்ன கையில? மதுரையில் இப்படியும் நடக்குமா? யாரந்த நபர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சமீபகாலமாகவே அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், வேலூர் சைபர் கிரைம் போலீஸாரும் ஏற்கனவே முக்கிய அறிவுறுத்தல்களை, மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவுடன் சென்றிருக்கிறார்.. மீண்டும் வேலூரில் என்ன நடந்தது தெரியுமா?

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, வேலூர் அணைக்கட்டு அருகே உள்ள பொய்கை மோட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

Vellore collector madurai

மோசடி புகார்

அதில், "சமீபத்தில் எனக்கு மும்பையில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.. அதில், சிபிஐ போலீசார் பேசுவதாக சொன்னார்கள். அவர்கள் சென்னையில் பயிலும் எங்களது மகள் பணமோசடி செய்துவிட்டதால், அவரை கைது செய்யாமல் இருக்க ரூ.45000 அனுப்புமாறும் சொன்னார்கள்.

உடனே நாங்கள், நாங்களும் ஆன்லைனில் அந்த பணத்தை அனுப்பினோம். பிறகுதான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது. நாங்கள் இழந்த ரூ.45000 பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது சைபர் கிரைம் போலீசார் சொல்லும்போது, "போலீசார் பேசுகிறோம், உங்களது உறவினரையோ, மகன், மகளையோ கைது செய்கிறோம் உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று சொன்னால், அதை உடனே புறக்கணியுங்கள்.. பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளதால் கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று சொல்லி பல மோசடிகள் நடப்பதால், அந்நபர்களை புறக்கணியுங்கள், அவர்களிடம் பேசி பணத்தை இழக்காதீர்கள்.

கிரெடிட் கார்டு அப்ஷன்

அதேசமயம் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு ஓடிபி எண் வராது, எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், உடனே கிரெடிட் கார்டு ஆப்ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும். மாறாக ஆன் செய்து வைத்திருப்பவர்களது பணம் எடுக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்..

அத்துடன் பல்வேறு நடவடிக்கைகளையும் வேலூர் மாவட்டத்தில் கையில் எடுத்தனர்.. அந்தவகையில், கடந்த 6 மாதங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியாகியிருந்தது..

அதாவது 1,335 மோசடி புகார்கள் வந்துள்ளதாகவும், மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கம் செய்து, 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கு வரவு வைப்பதற்கான பணி நடந்து வருவதாகவும் , சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. அத்துடன் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் அதிரடியாக அறிவித்திருந்தனர்..

கண்ணீர் மனு

இந்நிலையில், மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது.. அதாவது, மதுரையில் போலி நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் உள்ள மகன் பெயரில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக, நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், பெண் ஒருவர் கண்ணீருடன் தற்போது புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்துக்கு டிஆர்ஓ மாலதி தலைமை தாங்கினார்.. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்கள் குறைகளையும், புகார்களையும் விண்ணப்பங்களாக அளித்தனர்..

அந்தவகையில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த மெக்ரூன் என்ற பெண்ணும், மனு ஒன்றை அளித்திருக்கிறார்.. அந்த மனுவில் மெக்ரூன் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபியா

"என்னுடைய மகன் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.. கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் எங்கள் வீட்டிற்கு ஒரு சம்மன் வந்தது.

அதில் என்னுடைய மகன் பெயரில் மதுரையில் தொழில் நடப்பதாகவும், அது நவம்பர் மாதம் 2024ம் ஆண்டில் இருந்து செயல்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்தபோதுதான், என்னுடைய மகன் பெயரில் மதுரை மாவட்டம், அழகர் கோயில் மெயின் ரோடு கே.புதூர் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வந்ததும், அந்த நிறுவனத்திற்கு எனது மகன் பெயரில் ஜிஎஸ்டி எண் சென்னை மண்டலத்தில், மதுரை 2வது டிவிஷனில் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. அதாவது என்னுடைய மகன் பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி, அதன்மூலம், லட்சக்கணக்கான பணம் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள்.

விசாரணைக்கு பரிந்துரை

எனவே இது தொடர்பாக அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையாக புகார் தந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்..

இதில் தொழில் ஆரம்பித்ததாக குறிப்பிட்டுள்ள 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில், என்னுடைய மகன் மனநல பிரச்சனையாக , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான மருத்துவ ஆவணங்களும் என்னிடம் உள்ளது.. எனவே என்னுடைய மகன் பெயரில் நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+