Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேண்டாம் விட்ருங்க! கதறிய பெண் மருத்துவர்! அதிர்ந்த வேலூர்! குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

வேலூர் : நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பாக, 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இதற்க்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது .

வேலூரில் அதிர்ச்சி

வேலூரில் அதிர்ச்சி

இதையடுத்து முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த நிலையில். நேற்று மத்தியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வந்தது

போலீசில் புகார்

போலீசில் புகார்

அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 - ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும் , அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் , தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும் கூறியுள்ளனர். அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள் , பணம் சுமார் ரூ . 40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும் , மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

ஷேர் ஆட்டோ

ஷேர் ஆட்டோ

இது தொடர்பாக காவல்துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், வேலூர் காட்பாடியில் திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்க செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏருங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

குற்றப் பத்திரிக்கை தாக்கல்

குற்றப் பத்திரிக்கை தாக்கல்

இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் விசாரணை குறிப்புகள் அடங்கிய 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+