ஷாக் ஷாலினி.. பெற்ற குழந்தையை தவிக்க விட்டு.. ரவுடியுடன் தலைமறைவான மனைவி.. வெலவெலக்கும் வேலூர்!
வேலூர் ரடிவு ஜானி மனைவி ஷாலினி தலைமறைவாகி உள்ளார்
வேலூர்: பெற்ற மகளை தவிக்க விட்டுவிட்டு, கணவன்தான் முக்கியம் என்று ரவுடியுடன் தலைமறைவாகிவிட்டார் ஷாலினி.. இப்போது வேலூர் போலீசார் ஷாலினியை வலைவீசி தேடி வருகிறார்கள்!!
காட்பாடி ஜானி என்றால் ரொம்ப ஃபேமஸ்.. வேலூர் ரவுடி இவர்.. 34 வயதாகிறது.. 6 கொலை வழக்கு உட்பட, கொள்ளை, ஆட்கடத்தல் என 45-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை உடையவர்.. இவரை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.. 2வருஷமாகியும் ஆள் கிடைக்கவே இல்லை.. என்கவுன்டர் லிஸ்ட்டிலும் இவர் முதலிடத்தில் உள்ளாராம்!!

இந்நிலையில் இவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களிடம் ஜானி பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகிறாராம்.. இவருக்கு பயந்து ஒருசிலர் பணத்தை ஜானி அக்கவுண்டில் போட்டு விடுகிறார்கள்.. ஒருசிலருக்கு தொடர்மிரட்டல் இன்னமும் உள்ளது.. எனினும் உயிருக்கு பயந்து கொண்டு யாருமே வாய் திறக்காமல் உள்ளதாக தெரிகிறது.
இந்த அளவுக்கு ஜானிக்கு பின்னணியில் இருந்து உதவுவது அவரது மனைவி ஷாலினிதான்.. 26 வயதாகிறது ஷாலினிக்கு.. மிரட்டி வாங்கப்படும் பணத்தையும் ஜானி, ஷாலினியிடம்தான் தந்துவிடுவாராம்.. ஏற்கனவே இப்படி புகார் வந்ததால்தான், மார்ச் 23-ம்தேதி அவரை கைது செய்தது வேலூர் போலீஸ்!!
எப்படி எப்படியோ முயற்சி செய்து, கடந்த 29-ம் தேதி ஜாமீனும் வாங்கிவிட்டனர்.. ஆனால் நிபந்தனை ஜாமீன்தான்.. காட்பாடி ஸ்டேஷனில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லிதான் வெளியே விட்டனர்.. ஆனால் ஜாமீன் வாங்கிய உடனேயே ஷாலினியை காணவில்லையாம்.
அதனால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. அநேகமாக ஜானி இருக்கும் இடத்துக்கே ஷாலினியும் சென்றிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது.. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.. அந்த குழந்தையை அரியலூரில் ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் அந்த குழந்தையோ அம்மா வேண்டும் என்று ஏக்கத்தில் சாப்பிடாமல் உள்ளதாம்.. பெற்ற குழந்தையைகூட கண்டுகொள்ளாமல், பார்க்கவும் வராமல் கணவன் ஜானிதான் முக்கியம் என்று ஷாலினி எஸ்கேப் ஆகிஉள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த திருட்டு ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications