Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர் சந்திரா.. வாடகைதாரர் செய்த சர்ப்ரைஸ் சம்பவம்.. ஆடிப்போன குடியாத்தம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் குடியிருக்கும் வாடகைதாரர் ஒருவர், பல வருடங்களாகவே வாடகையை தரவில்லையாம்.. எனவே வாடகையை வசூலிக்க கட்டிட உரிமையாளர் சென்றுள்ளார்.. அப்போது நடந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே கதிகலங்க வைத்துள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் குடியாத்தம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?

வாடகைதாரர்களுக்கும், வாடகைக்கு விடும் உரிமையாளருக்கும் சில சட்டவிதிகள் உள்ளன.. இதற்குதான் வாடகை சட்டம் உள்ளன..

Vellore Rent Gudiyatham tenant

அதாவது வீட்டை வாடகைக்கு கொடுக்கும் ஹவுஸ் ஓனர்கள், வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்த சட்டம்.. இது இருவரின் உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாக்கக் கூடியதாகும்..

வாடகை ஒப்பந்த சட்டம்

எனவே இரு தரப்பிலுமே வாடகை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விதிகளை இருவரும் பின்பற்ற வேண்டும்.. இதிலுள்ள விதி மீறினால் சட்டம் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும்.

ஒருவேளை வீட்டு வாடகை அல்லது கட்டிட வாடகையை குடியிருப்பவர்கள் தராமல் போனால், வாடகையை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை ஓனர்கள் நடத்த வேண்டும்..

அது சாத்தியமாகாவிட்டால் எழுத்துப்பூர்வமாக நினைவூட்டல் அனுப்ப வேண்டும்... அதுவும் பலனளிக்காவிட்டால் சட்டப்படி, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, வாடகையை வசூல் செய்யலாம்... அவசர நிலைகளில், சட்டப்படி அனுமதி பெற்றவர்கள் மூலம் நிலத்தை மீட்கும் முயற்சி எடுக்கலாம், ஆனால் வாடகையாளர் உரிமைகளை மீறக் கூடாது.

வேலூர் வீட்டு உரிமையாளர் சந்திரா

தனிப்பட்ட உரிமை இருப்பின்போதும், வாடகைதாரர்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டவர் என்பதால், எதையுமே தடாலடியாக முடிவெடுக்காமல் நடைமுறைபடிதான் செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் வேலூரில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜர்ஜீஸ்பாஷா.. இவர் ஒரு எலக்ட்ரீஷியன்..

இவரது மனைவி பெயர் சந்திரா.. வயது 75 ஆகிறது.. ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை நர்ஸ் ஆவார்.. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஜர்ஜீஸ்பாஷா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வாடகை கேட்ட கட்டிட உரிமையாளர்

இவர்களுக்கு சொந்தமான வீடு, குடியாத்தம் சுண்ணாம்புப்பேடை புங்கனூர் அம்மன் கோவில் தெருவில் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 10 வருடங்களாக ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாடகை எடுத்துள்ளார்.. தன்னுடைய வழக்கறிஞர் அலுவலகமாக இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகிறார்

ஆனால், இவர் கடந்த சில ஆண்டுகளாகவே வாடகை தரவில்லையாம்.. அதனால் அந்த கட்டிடத்தை காலி செய்யுமாறு ஜர்ஜிஸ்பாஷாவின் மனைவி சந்திராவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.. அப்போதுகூட வழக்கறிஞர் ராமச்சந்திரன் அலுவலகத்தை காலி செய்யவில்லையாம்.

அறையில் பூட்டிய வாடகைதாரர்

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் அலுவலகத்தை காலி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.. அப்போது டிசம்பர் 31ம் தேதி அதாவது இன்றைய தினம் காலி செய்வதாக கூறியதாக கூறப்படுகிறது..

இந்நிலையில் நேற்று மாலை சந்திரா அவரது மூத்த மகன் இம்ரான் ஆகியோர் வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் சென்று அலுவலகத்தை காலி செய்வது குறித்து கேட்டுள்ளார்.. அதற்கு ராமச்சந்திரன், காலி செய்ய முடியாது என்று மறுத்து விட்டாராம்.. அத்துடன் அவர்களை அறைக்கு உள்ளேயே வைத்து பூட்டிக்கொண்டு சென்று விட்டாராம்..

இந்த தகவல் அறிந்ததுமே அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே கட்டிடத்துக்கு திரண்டு விரைந்து வந்தனர்.. அத்துடன் காவல்துறைக்கும் தகவல் தந்து வரவழைத்தனர்..

மயங்கி விழுந்த சந்திரா

போலீசாரும், வழக்கறிஞர் ராமச்சந்திரனுக்கு போன் செய்தனர்.. ஆனால் அவர் போனை எடுக்கவில்லையாம்.. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உள்ளே சிக்கிக்கொண்டதால், 75 வயதான சந்திரா, ரூமிலேயே மயங்கி விழுந்துவிட்டார்..

இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் வழக்கறிஞர் ராமச்சந்திரனின் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று சந்திராவை மீட்டனர்.. உடனடியாக அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்...

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... 75 வயது பெண்மணியை அவரது மகனுடன் சேர்த்து அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+