வேலூர் சாமுண்டீஸ்வரி.. கணவரின் நினைவு நாளிலேயே.. காட்பாடியில் உறவினர்கள் செய்தது தான் ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் காட்பாடி பிரம்மபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் பன்னீர்செல்வம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் கணவன் இறந்த சோகத்தில் வாழ்ந்த வந்த சாமுண்டீஸ்வரி, அவரது நினைவு நாளிலேயே யாருமே எதிர்பார்க்காத அந்த முடிவினை எடுத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கணவன் மனைவி உறவு என்பது மற்ற எல்லா உறவுகளையும் விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தன்னை பெற்றெடுத்த தாய், தந்தை, தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகள், தனக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே ரத்த சம்பந்தம் உள்ள உறவுகளாக உள்ளன. இதில் கணவன் அல்லது மனைவி இருவருமே எந்த சம்பந்தமும் இல்லாமல் இணைந்தவர்கள்.

பிரச்சனை இல்லாமல் சந்தோஷமாக வாழும் தம்பதிகள் வாழ்வில் பிரிய நேர்ந்தால் பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது. கடைசி காலங்களில் மட்டுமின்றி, நன்றாக வாழும் காலத்திலேயே கணவன் மனைவியை பறிகொடுத்தாலோ அல்லது மனைவி கணவனை பறிகொடுத்தாலோ அவர்களுக்கு அது காலத்திற்கும் வலி தரும் விஷயமாக இருக்கிறது. கணவனை பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு வேலூரை கலங்க வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரிக்கு 33 வயது ஆகிறது. சாமுண்டீஸ்வரி கணவர் இறந்த சோகத்திலும், குழந்தை இல்லாத ஏக்கத்திலும் விரக்தியில் இருந்து வந்திருக்கிறார்
இந்த நிலையில், கணவர் நினைவு நாளான கடந்த பிப்ரவரி 13ம் தேதி, சாமுண்டீஸ்வரி வீட்டில் புடவையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து பிரம்மபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சாமுண்டீஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை எரிக்கக்கூடாது என அவருடைய உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஆனால், ஊர் பொதுமக்கள் தரப்பில், அகால மரணம் அடைந்தவர் உடலை எரிப்பதுதான் எங்கள் ஊர் வழக்கம் எனக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த பிரம்மபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாமுண்டீஸ்வரி உடலை தகனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பிரம்மபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications