• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவசர அவசரமா தாலி கட்டி.. ஜஸ்ட் கொஞ்ச நாள்தான்.. "துணியால்" சுற்றி.. கை கால்களை கட்டி.. அலறிய வேலூர்

பேரணாம்பட்டு அருகே பெண் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Google Oneindia Tamil News

பேரணாம்பட்டு: விவசாய கிணற்றில், மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பேரணாம்பட்டு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

பேரணாம்பட்டில் காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுபெண்ணின் முகம், கை, கால்களை துணியால் கட்டிபோட்டு கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகரை சேர்ந்தவர் ராஜா.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவரது மகள் ராஜேஷ்வரி.. 19 வயதாகிறது.. இவர் ஸ்ரீதர் என்பவரை காதலித்து வந்தார்.

சிங்கப்பெண்.. செல்போன் திருடனை 1 கிமீ விரட்டி பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரி..பரபர சென்னை ‛சேஸ்’ சிங்கப்பெண்.. செல்போன் திருடனை 1 கிமீ விரட்டி பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரி..பரபர சென்னை ‛சேஸ்’

கல்யாணம்

கல்யாணம்

பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இந்த ஸ்ரீதர்.. இவருக்கு 20 வயதாகிறது.. இவர்கள் காதல் விவகாரம், பெண் வீட்டில் தெரிந்ததுமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த வயதிலேயே அவசரப்பட்டு திருமணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.. ஆனாலும் காதலர்கள் இருவரும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. இதையடுத்து, ஸ்ரீதரின் வீட்டில் இருவரும் வாழ்க்கையை துவக்கினர்.. ஆனால், தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது.. கல்யாணம் ஆன அன்றைய தினமே இவர்களுக்குள் பிரச்சனை வெடித்ததாக கூறப்படுகிறது...

 முன்கோபம்

முன்கோபம்

இதனால் ராஜேஷ்வரி கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு ஓடிவிடுவாராம்.. இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, அதாவது 3ம் தேதி, ஸ்ரீதர், ராஜேஷ்வரிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ராஜேஷ்வரியை அடித்ததாக தெரிகிறது.. வேதனையடைந்த ராஜேஷ்வரியும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.. ராஜேஷ்வரி கோபித்துக் கொண்டு, அவரது பெற்றோரிடம்தான் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்து, அவர்களிடம் முறையிட ஸ்ரீதரும் பின்னாடியே சென்றுள்ளார்..

 துணி துணி

துணி துணி

ஆனால் ராஜேஷ்வரி தன் அம்மா வீட்டிற்கும் போகாதது தெரியவந்தது... இதனால், ராஜேஷ்வரியை, ஸ்ரீதர் பல இடங்களில் தேடினார்.. இந்நிலையில், நேற்றைய தினம், கோக்கலூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அந்த சடலத்தின் முகம் முழுவதும், துணியால் சுற்றப்பட்டிருந்ததாகவும், கை, கால்கள் துப்பட்டாவால் கட்டப்பட்டு, சடலம் கிணற்றில் மிதப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதனால், பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்றனர்..

 கிணற்றுக்குள்ளே

கிணற்றுக்குள்ளே

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்யவும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... பின்னர் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீதரின் மனைவி ராஜேஷ்வரி என்பதையும் உறுதி செய்தனர். இதனிடையே, ராஜேஷ்வரியின் அப்பா ராஜா, தன்னுடைய மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதற்கு காரணமான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றும் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

 துணியை சுற்றி

துணியை சுற்றி

மர்ம ஆசாமிகள் ராஜேஷ்வரியின் முகத்தை துணியால் கட்டியதோடு, கை, கால்களையும் கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார்களா? அல்லது, கைகால்களை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்து, அதற்கு பிறகு கொன்று கிணற்றில் வீசிச்சென்றனரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்யாணமாகி, 3 மாதங்களே ஆன நிலையில், குடியாத்தம் ஆர்டிஓ விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. இதுகுறித்து டிஎஸ்பி ராமமூர்த்தி சொல்லும்போது, இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆர்டிஓ விசாரணை நடத்தப்படுகிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், முழுமையான விவரம் தெரியவரும்" என்றார்.

English summary
Who is this Peranampattu Girl and newly married woman found dead in a well
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X