கணவன், ஒரு வயது மகனை ஏரிக்கரையில் புதைத்த ராணிப்பேட்டை தீபிகா.. வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தீபிகா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கள்ளக்காதல் என்பது மிகவும் மோசமானது.. திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள், தங்கள் இணைக்கு கள்ளக்காதல் தெரியாத வரை அமைதியாக இருப்பார்கள். தெரிந்துவிட்டால் அவர்களை கொலை செய்யவும் தயங்குவது இல்லை. அப்படி கொல்ல முடியாதவர்கள் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளவும் தயங்குவது இல்லை. திருமணத்தை மீறிய உறவை சட்டம் அனுமதிக்காது என்பதை தாண்டி, சமூகமும் அனுமதிக்காது. இந்த சூழலில் தவறான முடிவினை எடுக்கிறார்கள்... அப்படி முடிவெடுத்த ராணிப்பேட்டை பெண்ணுக்கு 33 வருடம் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புரா மந்தவெளி தெருவை சேர்ந்த 25 வயதாகும் தீபிகாவுக்கு ராஜா என்ற கணவர் இருந்தார்.. ராஜா ஆற்காடு பகுதியில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது.
இந்த நிலையில், தீபிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதன் காரணமாக, தீபிகா கடந்த 2019ம் ஆண்டு, ஜெயராஜ் உடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்ததுடன், தாஜ்புரா ஏரிக்கரை ஓரமாக புதைத்துள்ளார். இதை கண்டுபிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீபிகா மற்றும் ஜெயராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பினை வழங்கினார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், ராஜா (28) மற்றும் ஒரு வயது மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், வழக்கிலிருந்து ஜெயராஜை விடுவித்தார். இதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமிய காவல் நிலைய நீதிமன்ற சிறப்பு ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் போலீசார், பலத்த பாதுகாப்புடன் தீபிகாவை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications