ராஜாஜி ஹாலில் ஜெ. உடல்... ‘இரும்புப் பெண்மணி’க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் மக்கள்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். இன்று அதிகாலை அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர், அதிகாலை ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு லட்சக்கணக்கான கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications