காவிரி பிரச்சினை: ஈரோட்டில் லாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது-வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி நீர் பிரச்னையில் தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 13ம் தேதி இரவு ஈரோடு மூலப்பட்டறையில், ஒரு லாரி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஐந்து லாரிகளின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. ஒரு லாரிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஈரோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஜர் படுத்தப் பட்ட இவர்கள் எட்டு பேரையும் 5 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications