வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை முயற்சி... சுற்றி வளைத்த மக்கள்... 2 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அசோக்நகர் பகுதியில் பகல் நேரத்தில் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவரது வீட்டில் புகுந்து திருட முற்பட்ட பெண் உட்பட இருவரை, பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். பழனிச்சாமி வீட்டில் இல்லாத சமயத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி திருட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த வேலைக்காரப்பெண் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார் திருடர்களை விரட்டிப் பிடித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications