காலில் வீக்கம் இருந்தாலும்.. கலங்காமல் அசத்தும் விஜய்.. சீனியரை ரேஸில் முந்தி சூப்பர்.. தடதட குமரி!

கன்னியாகுமரியில் விஜய் வசந்த் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலில் வீக்கம் இருந்த போதிலும் சரி, எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸின் விஜய் வசந்த் என்கிற விஜயகுமார். இதனால் கன்னியாகுமரி தொகுதியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன.. இதையடுத்து அனல் பறக்கும் பிரச்சாரங்களில் தமிழக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் ஸ்டார் தொகுதிகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில் ஒன்றுதான் கன்னியாகுமரி.

இங்கு இடைதேர்தலும் நடக்க போகிறது.. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களமிறங்கி உள்ளார்.. முதன்முறையாக போட்டியிடுகிறார்.. ஜூனியரான இவர் பெரும் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனுடன் நேருக்கு நேராக மோதுகிறார்.

 விஜய் வசந்த்

விஜய் வசந்த்

இவர்கள் 2 பேரும் வேட்பாளர்கள் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே மக்களின் பார்வை கன்னியாகுமரிக்கு திரும்பியது. எனினும், இந்த முறை பலவித கருத்துக்கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலும் சரி, அதற்கு முன்னமும் சரி, விஜய் வசந்துக்கே ஆதரவு நிலை தென்பட்டு வருகிறது. இதற்கு காரணம், பாஜக மீதான எதிரான அலை தமிழகம் எங்கும் வீசி வருகிறது... பொன் ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் நல்ல வேட்பாளர் என்றாலும், மோடி எதிர்ப்பு அலையில் அவர் மூழ்கி போகும் நிலை உள்ளது.

அப்பா

அப்பா

அதேபோல, விஜய் வசந்த்தை எடுத்துக் கொண்டால் தொகுதிக்குள் ஏராளமான நல்ல விஷயங்களை செய்து உள்ளார்.. இவைகள் தற்போது அவருக்கு ஆதரவாக உள்ளன.. அதேபோல தொகுதிக்கு அவரது அப்பா செய்த காரியங்களை தமிழகமே அறியும்.. அவைகளை தொகுதிக்குள் எடுத்து கூறி தானும் அந்த பணிகளை தொடர்வேன் என்று சொல்லி வாக்கு கேட்டு வருவது, சாதகமாகவே பார்க்கப்படுகிறது.. இதைதவிர, குமரியில் துறைமுகத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சாதகமாக அமைந்து வருகிறது.

 வாக்குறுதி

வாக்குறுதி

மேலும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த திட்டமும் கொண்டு வர மாட்டோம் என்ற வாக்குறுதியும் வேலை வாய்ப்பு பெருக முயற்சி எடுப்பேன் என்ற வாக்குறுதியும் தொகுதி மக்களை கவர்ந்துள்ளது... எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக பணி எடுக்கிறார்கள் என்பது கூட்டணிக்கு கிடைக்கும் ஆகப்பெரும் பலம்.

குங்குமம்

குங்குமம்

அதனால்தான், காலில் வீக்கம் வலி இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய் வசந்த்... செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.. வயதான பெண்கள் விஜய் வசந்துக்கு குங்குமம் வைத்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. வியாபாரிகள் விஜய் வசந்த்தை நேரில் பார்த்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்..

 கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இதைதவிர, சாதி மத கணக்குகளும் விஜய்க்கு சாதகமாகவே இருக்கிறது... மொத்தத்தில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்ற சூழ்நிலையே காணப்படுகிறது. இதனால் தமிழக மக்களின் கவனம் குமரியில் மையம் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+