• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தைரியமா இருங்க.. எல்லாம் அவங்களே முடிச்சிடுவாங்க".. நிர்வாகிகளிடம் நம்பிக்கை தந்த 2 மாஜிக்கள்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: "யாரை நம்பியும் நாம் இல்லை... உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தீவிரக் களப்பணி ஆற்றுங்கள்" என்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரப்போகும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.. கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன..

சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!

அதன்படி, பாமக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. அதேபோல, தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.

பாஜக

பாஜக

பாஜகவோ, தாங்கள் கூட்டணியா? தனித்து போட்டியா என்பதை 2 நாட்களில் அறிவிப்பதாக சொல்லி உள்ளது.. ஆனால், அதிமுக தரப்பு இதுவரை உறுதியான முடிவு அறிவிக்காமல் உள்ளது.. இந்நிலையில்தான், விழுப்புரத்தில் அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவிசண்முகமும், ஓஎஸ் மணியமும் கலந்து கொண்டு பேசினர்.

திமுக

திமுக

சிவி சண்முகம் தொண்டர்களிடம் பேசும்போது, "திமுக அரசிடம் நியாயம், தர்மத்தை நாம எதிர்பார்க்க முடியாது... ஏற்கனவே, சென்னையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அது நிரூபணமாகி இருக்கிறது... சட்ட திட்டத்திற்கு உட்பட்டு திமுக அரசு செயல்படாது. நாம்தான் உன்னிப்பாக கவனித்து, மனுக்களை சரிபார்த்து, தாக்கல் செய்ய வேண்டும்.

வருத்தம்

வருத்தம்

கடந்த தேர்தலில் மயிரிழையில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.. திமுகவுக்கு விருப்பப்பட்டு மக்கள் ஓட்டுப்போடவில்லை.. அப்படி வாக்கு செலுத்தியர்கள்கூட, இன்னைக்கு ஏன் தான் திமுகவுக்கு ஓட்டுப் போட்டோம் என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டனர்... இருந்தாலும் பலமான எதிர்க்கட்சியாக நாம் இன்றைக்கு உள்ளோம்.. இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்.

  PMK VS AIADMK | உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி | Oneindia Tamil
  ஆட்சி

  ஆட்சி

  நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை தந்து, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது... திமுகவின் 100 நாள் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியில் இருந்திருக்கலாம் என்று அரசு ஊழியர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டனர்.. நிபந்தனையின்றி 6 பவுன் நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று அதிமுக தெரிவித்தது.. ஆனால், அதை திமுக தடுத்துவிட்டது..

  தள்ளுபடி`

  தள்ளுபடி`

  இப்போது 5 பவுன் நகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதுவும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது. இந்த நகைக் கடன் தள்ளுபடியால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்க போவதில்லை.. யாருக்கு பலன் என்றால், இதில், திமுகவினர்தான் முழுமையாக பயன்பெறுவார்கள்..

  நம்பிக்கை

  நம்பிக்கை

  வரும் அக்டோபர் 17ம் தேதி வந்தால், அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது... தமிழகத்தில் இதுவரை அதிமுக 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது... யாரை நம்பியும் நாங்கள் இல்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் உற்சாகத்துடனும், நம்பிக்கையோடும் வேலை பாருங்கள்.. தைரியமா இருங்க.. நாம எதுவுமே பண்ணவேண்டாம்.. எல்லாம் அவங்களே பண்ணி முடிச்சிடுவாங்க.. நமக்கு வெற்றிதான்" என்றார்.

   ஓஎஸ் மணியன்

  ஓஎஸ் மணியன்

  இதைத் தொடர்ந்து, அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியன் பேசும்போது, 'உள்ளாட்சித் தேர்தல் சாதாரண தேர்தல் கிடையாது... தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள், மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீடாகச் சென்று அமர்ந்து திண்ணை பிரச்சாரம் செய்து, மக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும்..

   அதிருப்தி

  அதிருப்தி

  ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைத்ததை எதிர்த்து, தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... இதனால் திமுகவினர் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும்" என்றார்.

  English summary
  ADMK Ex Ministers says about DMK and TN Local body election
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X