விழுப்புரம் மாவட்டத்தில்.. தனியாக வசித்து வந்த வயதான தம்பதி தற்கொலை.. வறுமை காரணமா?
விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (77) விவசாயி. இவரது மனைவி பொற்கலை (72).
தம்பதியருக்கு ஜெயா (50), சரோஜினி (47), சிவகாமி (40) ஆகிய மூன்று மகள்களும், லோகநாதன் (45) என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

வயதான தம்பதி
வயதான தம்பதியர் மட்டும் தங்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் புதுச்சேரியில் வசிக்கும் தனது மகன் லோகநாதன் மற்றும் பேரக்குழந்தையிடம் மொபைல் போன் மூலம் கணவன்-மனைவி இருவரும் பேசி நலம் விசாரித்துள்ளனர்.

வயதான தம்பதி
நேற்று நீண்ட நேரமாகியும் வயதான தம்பதிகள் வெளியே வராததால் அக்கம், பக்கம் உள்ளவர்கள் வீட்டிற்குச் சென்ற பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் படுக்கையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிபாபுசமுத்திரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயதான காலத்தில் வறுமையின் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 பெண் குழந்தைகள்
ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற இவர்களை தனியாக தவிக்க விட்டதால் மன உளைச்சல் காரணமாக இருந்திருப்பார்களா என்ற சந்தேகமும் பலரிடம் எழுந்துள்ளது. ஏதேனும் கடன் தொல்லை காரணமாக என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலவச ஆலோசனை
இது போன்ற தற்கொலை எண்ணம் வந்தாலே அரசு மன நல மருத்துவ மையங்களை இலவச தொலைபேசி மூலம் அணுகலாம். அது மட்டுமல்லாமல் எத்தனையோ தன்னார்வல அமைப்புகளும் தற்கொலைகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications