பெண் எஸ்.பியிடம் தவறாக.. ‘அவரும் ஆஜராகணும்” - முன்னாள் டிஜிபி வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு, முன்னாள் டி.ஜி.பி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் கணவர் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெண் எஸ்.பி.யின் கணவரான ஐஏஎஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து வரும் 30-ஆம் தேதி பெண் எஸ்.பி.யின் கணவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அன்று அரசு தரப்பு சாட்சிகளான காவல்துறை ஏடிஜிபி ஜெயராம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

பாலியல் தொல்லை
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தபோது காவல்துறை சிறப்பு டி.ஜி.பியாக பணியாற்றி வந்தவர், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம்
மேலும், பாலியல் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிஸார், முன்னாள் டி.ஜி.பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணை முடிந்து விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது 400 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தாக்கல் செய்தனர்.

சிறப்பு டிஜிபி
இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அரசு தரப்பு சாட்சியான சென்னை சிபிசிஐடி எஸ்.பி .ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் ஆஜராகினர். சென்னை சிபிசிஐடி எஸ்.பி ஜியா வுல் ஹக்கிடம் நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தி அவர் அளித்த சாட்சியங்களை பதிவு செய்தார். பின்னர் அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

குறுக்கு விசாரணை
மேலும், அரசு தரப்பின் 2-வது சாட்சியான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் கணவரான ஐஏஎஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, வரும் 30-ஆம் தேதி பெண் எஸ்.பி.யின் கணவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆஜராக உத்தரவிட்டார்.

முக்கிய உத்தரவு
மேலும், அன்று அரசு தரப்பு சாட்சிகளான காவல்துறை ஏடிஜிபி ஜெயராம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரும் ஜூன் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை வழக்கு சூடுபிடித்துள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications