ஆன்லைன் ரம்மி விவகாரம்.. அரசுக்கும், ஆளுநருக்கும் மறைமுக ஒப்பந்தம் இருக்காம்.. சாடிய சிவி சண்முகம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட மசோதவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்கவில்லை. முறையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளாமல் திட்டமிட்டே சட்டம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக இந்த அரசு செயல்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் இருப்பது போல் தோன்றுகிறது என அதிமுக ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் சந்தேகம் தெரிவித்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி ஏராளமானவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் கடனை கட்ட முடியாமல் தவித்து தற்கொலை செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது வரை 40க்கும் அதிகமானவர்கள் ஆன்லைன்ரம்மி சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தான் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இதற்காக தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இயற்றி ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பியது. இதனை நீண்டநாட்களாக நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் தற்போது திருப்பி அனுப்பி உள்ளார். இது மாநில அரசின் அதிகாரத்தில் இல்லை எனக்கூறி மசோதாவை அவர் திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 சிவி சண்முகம் பேட்டி

சிவி சண்முகம் பேட்டி

இந்நிலையில் தான் விழுப்புரம் மாம்பழபட்டு சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் குருசுபராஜபதி அறக்கட்டளைளையை அதிமுக ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி சிவி சண்முகம் கூறியதாவது:

இளைஞர்களை உயிரை பறிக்கும்..

இளைஞர்களை உயிரை பறிக்கும்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதுமாக போதைகளமாக உள்ளது.
தமிழகம் இன்று சூதாட்ட போதை களமாக மாறியுள்ளது. 24 மணிநேரமும் டாஸ்மாக் திறந்திருக்கிறது. கஞ்சா அனைத்து பகுதிகளில் கிடைக்கும் வகையில் உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் விலைமதிப்பில்லாத இளைஞர்களை பறித்து கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை..

எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை..

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியது. ஆனால் ஸ்டாலின் அரைவேக்காட்டு தனமாக எதிர்கட்சிகளின் ஆலோசனையை முழுமையாக கேட்கவில்லை. மேலும் முறையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளாமல் திட்டமிட்டே சட்டம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக இந்த அரசு செயல்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது.

மறைமுக ஒப்பந்தம்

மறைமுக ஒப்பந்தம்

அரைவேக்காட்டு தனமாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி அதை அவர் காலதாமதம் செய்து திருப்பி அனுப்புகிறார். இந்த அரசும், ஆளுநரும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து அனுப்புவது போன்று அனுப்பி காலதாமதம் செய்து நாடகம் நடத்தி கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஒருபக்கம் ஆளுநரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் ஸ்டாலினும் அவரது மகனும் ஒன்றாக ஆளுநருடன் தேநீர், சமோசா சாப்பிட்டனர். ஒருசட்டத்தை ஆளுநரிடம் ஒப்புதல் பெறமுடியாமல் அருகதையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.

அரசை கவிழ்க்கவா?

அரசை கவிழ்க்கவா?

ஆள்வதற்கு திறனில்லாமல் சட்ட ஒழுங்கை காப்பாற்றாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழத்திற்கு பணிக்கு வருகிற தொழிலாளர்களை காப்பாற்ற முடியாமல் அதை மறைக்க திமுக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்'' என சிவி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+