கடவுளா பார்த்து களி திங்க அனுப்பியிருக்காரு.. சிதம்பரம் குறித்து சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு
விழுப்புரம்: இந்திய பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு சிதம்பரம் கடத்தியதாக என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்
விழுப்புரத்தில் சட்ட துறை அமைச்சர் சிவி சண்முகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் திறந்து வைத்தார் பிறகு
போக்குவரத்து துறை சார்பில் 13 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிவி சண்முகம் பேசுகையில், "இந்தியாவின் நிதியை கொள்ளையடித்து சீரழித்து இந்தியப் பணத்தை வெளிநாட்டிற்கு கடத்திய மிகப்பெரிய குற்றவாளி ப சிதம்பரம் ஆவார். இவர் யோக்கியர் கிடையாது. டெல்லி உயர்நீதிமன்றம் இது விசாரிக்கப்பட வேண்டிய குற்றம் என கூறியுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது இன்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே கனிமொழியால் தமிழகத்தின் மானம் கப்பல் ஏறியது. இன்றைக்கு ப.சிதம்பரத்தால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. எங்களை சிறைக்கு அனுப்புவோம் என கூறியவர்களுக்கு இன்று கடவுளாக பார்த்து இவர்களை சிறைக்கு அனுப்பி களி தின்ன வைத்துள்ளார்" என்றார்.
டெல்லியில் திமுக போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளதற்கு செய்தியாளர்களின் கேள்விக்கு திமுக அரசியலுக்காக செய்துகொண்டிருக்கும் போராட்டம் என்ன போராட்டம் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்கின்றார்கள் என திமுகவினர் கூறினார்.












Click it and Unblock the Notifications