"மடி மீது" தலைவைத்த செந்தாமரை.. சுற்றிலும் அத்தனை பேர்.. போலீஸ் கன்னத்திலேயே அறைந்து.. அதிர்ந்த அம்மு
பெண் போலீஸின் கன்னத்தில், மூதாட்டி ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது
விழுப்புரம்: பெண் போலீஸையே, எகிறி பாய்ந்து ஒரு பெண் சாமியார் கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.. விழுப்புரமே இதைக் கேட்டு அதிர்ந்து போய்கிடக்கிறது.. என்னவாம்?
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சேத்பட் செல்லும் சாலை செக்கடிகுப்பம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேல்மலையனூர் தாலுகாவை சார்ந்த வட்டாட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு பணியில் அவலூர்பேட்டை, போலீசார் 30க்கும் மேற்பட்டோர் என மொத்த பேரும் நேற்று திரண்டிருந்தனர்..

பெண் சாமியார்
வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றுவதற்காக நேரடி பார்வை மேற்கொண்டனர். வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் ஆரம்பமானது.. மொத்தம், 3 கான்கிரீட் வீடுகள், ஒரு கூரை வீடு, 70வது சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்ததை மீட்டனர்... ஆனால், அந்த கிராமத்தை சேர்ந்த மணி என்பவருடைய மனைவி கெங்கம்மாளுக்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பிடிக்கவில்லை..

மடி மீது தலைவைத்து
காரணம், இந்த அரசு நிலத்தில்தான், கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார் அந்த பெண் சாமியார்.. அவர் பெயர் கெங்கம்மாள்.. செந்தாமரை என்று இன்னொரு பெயரும் உண்டாம்.. 65 வயதாகிறது.. ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளை பார்த்ததுமே, தன்னுடைய வீட்டு முன்பு படுத்துக்கொண்டு மயக்கம் வந்ததை போல நடிக்க துவங்கிவிட்டார் கெங்கம்மாள்.. இதை பார்த்த போலீசார், கெங்கம்மாளை எழுந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.. ஆனால், கெங்கம்மாள், உடல் அசைவின்றி, கண்ணையும் இறுக்கமாக மூடிக்கொண்டு, அவரது கணவனின் மடிமீது தலை வைத்து படுத்துக் கொண்டார்..

கன்னத்தில் பளார்
இதனால், போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.. ஒரு கட்டத்தில், அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் அம்முவை அனுப்பி, கெங்கம்மாளை எழுப்பி விட சொன்னார்கள்.. அந்த பெண் போலீசும், கெங்கம்மாளின் கைப்பிடித்து எழுப்ப முயன்றார்.. உடனே கண்களை திறந்த கெங்கம்மாள், ஆத்திரம் அடைந்து, பெண் போலீஸின் முகத்தில் பளார் என்று அறைந்துவிட்டார். அதுவும் 2 முறை அம்முவின் கன்னத்தில் அறைந்துவிட்டார் இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அம்மு, கெங்கம்மாளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. கெங்கம்மாள் மறுபடியும் பெண் போலீஸை தாக்குவதற்காக அவர் மீது பாய்ந்தார்..

எலுமிச்சம்பழம்
அதற்குள் அங்கிருந்த சக போலீசாரும் சுதாரித்து கொண்டு, கெங்கம்மாளை தடுத்து நிறுத்தினர்.. அங்கிருந்தும் அவரை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.. அதாவது, தரிசு நிலத்தில் இருந்த வீடுகளை இடித்ததைபோல, அங்கிருந்த அம்மன் கோவில் சுற்று சுவரையும் இடிக்க வேண்டியிருந்தது... எனவே, அந்த சுவற்றை அகற்றுவதற்கு முன்னதாக வட்டாட்சியர் அலெக்ஸ்சாண்டர் கற்பூரம் ஏற்றி எலுமிச்சம்பழம் சுற்றி போட்டு, வேண்டியபிறகு, ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினாராம்..

பாசாங்கு
இதன்பிறகு, அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. அப்போதுதான், அரசு நிலத்தில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வந்த பெண் சாமியார் செந்தாமரை என்கிற கெங்கம்மாள், டிராமா செய்துள்ளார்.. அதுவும் பெரிய கத்தியை, தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு சாமி வந்தது போல் நடித்துள்ளார்.. அதற்கு பிறகு, மயங்கியதுபோல, கணவரின் மடி மீது படுத்துக் கொண்டு, பாவ்லா செய்ததாக சொல்கிறார்கள்.. பெண் போலீஸ் அம்முவின் கன்னத்தில் மூதாட்டி அறைந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிறது.!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications