சூடு சொரணை இருந்தா ’அது’ மறக்காது! பேராசிரியரை நினைவு கூர்ந்த கனிமொழி! ஆளுநர் மீதும் நேரடி அட்டாக்!
விழுப்புரம் : ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு என்ன காரணம்? என திமுக மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சரும், தி.மு.கழக பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டிவனம் வண்டிமேடு அண்ணா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக மாநில துணை பொதுச் செயலாளரரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனிமொழி
இதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி," பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், பேராசிரியர் போன்ற தலைவரை நாம் சந்திப்பது ஒரு அசாதாரணமான செயல் இல்லை, நம்மை எல்லாம் 2ஜி வழக்கை வைத்து பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தார்கள், ஆனால் தற்பொழுது நீதிமன்றம் 2ஜி வழக்கை பொய் என நீதிமன்றம் உண்மை தீர்ப்பை அளித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி
தனக்கு எந்த இழுக்கு வந்தாலும் அதை பற்றி எப்போதும் கோபப்பட்டார், ஆனால் தமிழுக்கு தமிழ் மக்களைக்கு இழுக்கு வந்தால் அதிபடியாக கோபப்படுவார். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னரை நியமித்து, இங்கு ஆர்எஸ்எஸ் பணிகளை செய்து வருகிறார்கள், ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காதாற்க்கு என்ன காரணம்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள்.

இந்தி எதிர்ப்பு குறையாது
இந்தி எதிர்ப்பு இன்னும் நீர்த்து போகவில்லை... சூடு சொரணை இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என பேசியவர் பேராசிரியர். திரடவிட ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள், தமிழகம் தற்போது வளர்ந்து பாதையில் இருக்கிறது எனவும், மருத்துவம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது... இதுதான் திராவிட மாடல். நீட் மருத்துவ கல்லூரியில் நுழைவு தேர்வு வைத்து தமிழக மாணவர்களை படிக்க கூடாது என சதி திட்டம் செய்து வருகிறார்கள் பஜாகவினர். பெட்ரோல் விலை குறைந்தாலும் மத்திய அரசு விலையை குறைத்து தருவது இல்லை மக்களை சாதி மதம் என பிரிக்கும் வேலையே பாஜகவினர் செய்து வருகின்றனர்.

திராவிட ஆட்சி
விவசாயிகளுக்கும் எதிராக சட்டம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் தான் எதிர் கட்சிகள், அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை ஆனால் திராவிட ஆட்சி அடைந்தவுடன் இளைஞர் நலனில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் முதல்வர் ஸ்டாலின். மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் அளிக்க வேண்டும் என ஒரே நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின்" என்று பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications