கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு ஈடாகுமா?.. கதறும் விழுப்புரம் ஜெயஸ்ரீயின் தங்கை
விழுப்புரம்: கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு ஈடாகுமா என விழுப்புரம் மாவட்டத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட ஜெயஸ்ரீயின் தங்கை அழுதது காண்போரை கலங்கடித்துள்ளது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ராஜீ. இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த மகள் ஜெயஸ்ரீ 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஜெயபாலுக்கும் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்த முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இருவரும் அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக இருந்த போதிலும் ஜெயபால் தங்களை எதிர்த்து பேசுகிறாரே என்ற ஆத்திரத்தில் இருவரும் இருந்துள்ளனர்.

புகார்
இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் முருகன், கலிய பெருமாள்- ஜெயபால் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் ஜெயபாலை அடித்துள்ளனர். இதனால் ஜெயபால் அவர்கள் மீது புகார் அளிக்க திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

வாக்குமூலம்
அப்போது அவரது பெட்டிக் கடையில் தனியாக இருந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை முருகனும் கலிய பெருமாளும் அவரது வீட்டுக்குள்ளே தூக்கிக் கொண்டு போய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி இருவர் குறித்தும் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கண்ணீர் வரவழைப்பு
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சிறுமியின் மரண வாக்குமூல வீடியோ தமிழகம் முழுவதும் வைரலானது. இதை பார்ப்போர் மனம் பதற வைத்தது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் இறப்பு குறித்து அவரது தங்கை கதறி அழுதவாறே பேசியது கண்ணீரை வரவழைக்கிறது.

அக்கா
இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தங்கை கூறுகையில் 8 ஆண்டுகளுக்கு முன்னாடியே முருகன், கலிய பெருமாள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு என் அக்காள் இறந்திருக்கமாட்டாள். கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு அது ஈடாகாது. என் அக்கா என் கூடவே இருக்கும் என அழுதுக் கொண்டே கூறியது காண்போரை கலங்கடிக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications