அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை
Recommended Video
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது வீட்டில் அவரது தங்கை வள்ளியின் மகன் லோகேஷ் குமாரை (26) வளர்த்து வந்தார் இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர்

இவர் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில் உணவு அருந்தி விட்டு மேல் மாடியில் உறங்க சென்றுள்ளார். நேற்று முழுவதும் மேல்மாடி கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி பார்த்துள்ளனர்.
கதவு திறக்கப்படாததால் தகவலறிந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் குமார்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்தவுடன் மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனை செய்து அமைச்சர் சிவி சண்முகம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அதிமுக பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் லோகேஷ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications